இந்த வாரம் அப்படி பர்ஃபார்ம் பண்ணும் போதே தெரியும்.. ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டை காலி பண்ண அபிநய்?

சென்னை: பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த எவிக்‌ஷனுக்காக ரசிகர்கள் ஒவ்வொரு வாரமாக காத்திருந்த நிலையில், ஒரு வழியாக அபிநய் எவிக்ட் ஆகி விட்டாராம்.

நிச்சயம் அபிநயின் எவிக்‌ஷன் ரசிகர்களுக்கு அன் எக்ஸ்பெக்டட் எவிக்‌ஷன் தான்.

சேவ் ஆன போட்டியாளர்கள்

சேவ் ஆன போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களையும் பிக் பாஸ் நாமினேட் செய்திருந்தார். அதன் பின்னர் நாமினேஷனில் இருந்து சேவ் பண்ண கடும் போட்டிகள் கொடுக்கப்பட்டது. சிபி, நிரூப், தாமரை, சஞ்சீவ் மற்றும் அமீர் என வரிசையாக அதில் சேவ் ஆனார்கள்.

ஃபைனல் நாமினேஷன்

ஃபைனல் நாமினேஷன்

கடைசியாக ராஜு, பிரியங்கா, அக்‌ஷரா, பாவனி, வருண் மற்றும் அபிநய் பிக் பாஸால் காப்பாற்றப்படாமல் ஃபைனல் நாமினேஷனில் உள்ளனர். இதில், ராஜு முதல் ஆளாகவும் பிரியங்கா இரண்டாவது நபராகவும் சேவ் ஆகி விடுவார்கள் என்பது ரசிகர்களுக்கே தெரிந்த விஷயம். மீதமுள்ள மூவரில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்றே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டேஞ்சர் ஜோன்

டேஞ்சர் ஜோன்

அக்‌ஷரா, வருண், பாவனி மற்றும் அபிநய் தான் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கும் போட்டியாளர்கள். இதில், வருண் அல்லது அபிநய் இருவரில் ஒருவர் எவிக்ட் ஆவாரா? இல்லை இருவருமே வெளியேறுவார்களா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கான பதில் கிடைத்துள்ளது.

அபிநய் எவிக்டட்

அபிநய் எவிக்டட்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருது அபிநய் வெளியேறி உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் நடிகை சாவித்ரிக்கும் பிறந்த மகளின் மகனான அபிநய் ராமானுஜன் எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீடியா வெளிச்சத்திற்காக ஏங்கி வந்த அவர் 76ம் நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

அசத்திய அபிநய்

அசத்திய அபிநய்

கடந்த வாரம் இமான் அண்ணாச்சிக்கு எப்படி மாலை மரியாதை எல்லாம் செய்து வெளியே அனுப்பினார்களோ அதே போல இந்த வாரம் அபிநய் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று கடைசி வரை தாமரை உடன் போட்டி போட்டு தோற்றது போல காண்பித்து வெளியே அனுப்பி உள்ளார்களா? என்கிற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுவரை அபிநயை காப்பாற்றி வந்த நிலையில், கடந்த வாரம் நடந்த பாவனி பிரச்சனை காரணமாக அபிநய் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போன வாரமே அபிநயை பாவனி ஆர்மியினர் தான் ஓட்டுப் போட்டு காப்பாற்றியதாகவும் இந்த வாரம் அபிநயை வெளியேற்ற பாவனி ஆர்மியினர் முடிவு செய்ததே இந்த எவிக்‌ஷனுக்கு காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X