twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் ரசிகர்கள் யாரும் ஓட்டுப் போடலையா? இந்த வாரம் பிக் பாஸ் 5ல் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?

    |

    சென்னை: சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து பிரபலமான சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்ததில் இருந்தே நடிகர் விஜய்யை துணைக்கு அழைத்துக் கொண்டே புரமோஷன் தேடினார்.

    வெளியே அவரது மனைவி ப்ரீத்தி அதற்கு மேல் விஜய் தனது நண்பர் சஞ்சீவுக்குத் தான் ஓட்டுப் போடுகிறார் என ஒரே போடாக பேட்டிக் கொடுத்தார்.

    ஆனால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதே சஞ்சீவ் தான் எனும் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

    தலைகனம் இல்லாதவர்... அதனால்தான் 'தல'யை நீக்க சொல்லியிருக்காரு... ராஜமௌலி பாராட்டு தலைகனம் இல்லாதவர்... அதனால்தான் 'தல'யை நீக்க சொல்லியிருக்காரு... ராஜமௌலி பாராட்டு

    டபுள் எவிக்‌ஷன் இல்லை

    டபுள் எவிக்‌ஷன் இல்லை

    இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என சில தினங்களுக்கு முன்பாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த வாரம் ஒருவரை மட்டுமே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கை நழுவிய டிக்கெட்

    கை நழுவிய டிக்கெட்

    கடைசி வரை டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் போராடிய சஞ்சீவ் கடைசி நேரத்தில் அவுட் ஆகி வெளியேறினார். சஞ்சீவ் மற்றும் சிபி தான் கடைசி டிடிஎஃப் போட்டிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமீருக்கு டிக்கெட் டு ஃபினாலேவை கொடுக்கவே இப்படி பிபி டீம் ஏமாத்திட்டாங்க என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சஞ்சீவை வெளியேற்ற ஹவுஸ்மேட்கள் கடைசியில் கேள்விகளை அமீருக்கு சாதகமாக கேட்டது தான் சஞ்சீவ் வெளியேற காரணம் என்றும் கூறப்படுகிறது.

    சஞ்சீவ் எவிக்டட்

    சஞ்சீவ் எவிக்டட்

    டிக்கெட் டு ஃபினாலேவில் ஆரம்பத்தில் அவுட் ஆகி வெளியேறியவர்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சஞ்சீவ் தான் எவிக்ட் ஆகி வெளியேறி உள்ளார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. ஃப்ரீஸ் டாஸ்க் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தால் போதும் என நினைத்த சஞ்சீவுக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வரை வாய்ப்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    விஜய் ரசிகர்கள் ஓட்டுப் போடலையா

    விஜய் ரசிகர்கள் ஓட்டுப் போடலையா

    பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே ஒவ்வொரு விஷயத்திலும் தனது நண்பர் நடிகர் விஜய் பற்றியே பேசி மைலேஜை ஏற்றும் ஸ்ட்ராட்டஜியை சஞ்சீவ் பயன்படுத்தினார். அவரை விட பல மடங்கு அதிகமாக நடிகர் விஜய் சஞ்சீவுக்குத் தான் ஓட்டுப் போடுகிறார் என பேட்டி எல்லாம் கொடுத்தார். நாமினேட்டே ஆகாத ஒருவருக்கு எப்படி விஜய் ஓட்டுப் போட்டார் என்றும் கேள்விகள் கிளம்பின. இந்நிலையில், இந்த வாரம் சஞ்சீவ் வெளியேறி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் சஞ்சீவை கைவிட்டு விட்டனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    This week actor Sanjeev evicted from Bigg Boss Tamil 5 details leaked in social media. He gave a tough fight in Ticket to Finale task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X