உலகமே பாராட்டிய சூரியின் கொட்டுக்காளி.. மாரியின் வாழை.. இந்த வாரம் ரிலீஸ் ஆகும் தரமான படங்கள் லிஸ்ட்
சென்னை: இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவுக்கு என்று எப்போதும் ஒரு மார்க்கெட் உண்டு. நூறு கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்யும் படங்கள் ரிலீஸ் ஆவது ஒரு புறம், நல்ல படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு ஒரு புறம், கதாநாயக பிம்பத்தை மைய்யப்படுத்தி உருவாக்கப்படும் படங்கள் ஒரு புறம் என ஆண்டுக்கு குறைந்தது 200இல் இருந்து 300 படங்கள் வரையிலும் கூட ரிலீஸ் ஆகின்றது.
மொத்தம் உள்ள 52 வாரங்கள், விழாக்காலங்கள் என ஆண்டுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்த 100 நாட்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு படங்கள் தொடங்கி, அதிகபட்சம் நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸ் ஆகின்றது. சில சமயங்களில் ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகியுள்ளது.

புதிதாக தமிழ் சினிமாவில் கால் பதித்த அனுபவமில்லாத புதிய தயாரிப்பாளர்கள் சரியான கதைத் தேர்வினால் இமயத்தை தொட்டுள்ளனர். அதேபோல் பல நூற்றுக்கணக்கான கோடிகளை தவறான கதையின் மீது கொட்டி கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களும் இருக்கின்றார்கள். இதே நிலைதான் இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும். இந்நிலையில் இந்த வாரம் குறிப்பாக ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.
1. கொட்டுக்காளி: கூழாங்கல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம், கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. இந்தப் படம் உலகத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது.

2. வாழை: வாழை படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து அவரே இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தினை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுகின்றது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் இயக்குநர் மாரி செல்வராஜின் இள பருவத்தில் நடந்ததை படமாக எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படமும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

3. சாலா: இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகின்றார் எஸ்.டி. மணிபால். இந்தப் படத்தில், தீரன்,ஸ்ரீ நாத்,அருள்தாஸ், சம்பத்ராம், ரேஷ்மா வெங்கடேஷ், மெட்ராஸ் வினோத் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரித்துள்ளார். மேலும் விவேக் குச்சிபொட்லா இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளார் தீசன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை அண்மையில் நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். இந்தப் படமும் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.
4. போகுமிடம் வெகு தூரமில்லை: விமல் கதாநாயகனாக நடித்துள்ள படம், போகுமிடம் வெகு தூரமில்லை. கதாநாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். படத்தில் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், தீபா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தில் இருந்து, புல்லட் வண்டியிலே பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கும் என திரையுலகில் இப்போதே பேச்சுகள் அடிபடுகின்றது.

5. அதர்ம கதைகள்: தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தில் இருந்து, தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் திருப்தியான படத்தைக் கொடுத்து வருபவர் நடிகர் வெற்றி. இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் அதர்ம கதைகள். இந்தப் படத்தினை காமராஜ் வேல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிறுமிகளின் கடத்தல் கதைக்களத்தினை வைத்து படத்தினை இயக்கியுள்ளார் காமராஜ் வேல். இப்படத்தில் மறைந்த நடிகர் பூ ராமு, சாக்ஷி அகர்வால், திவ்யா துரைசாமி அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

6. நாற்கரப்போர்: வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் நாற்கரப்போர். இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநருக்கு இதுவே முதல் படம். படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. குறிப்பாக ட்ரைலர் வெளியானபோது சமூக நீதி கருத்தினை பேசக்கூடிய படம் என்பது, தெளிவாகத் தெரிந்தது. இந்தப் படத்தில் அபர்ணதியுடன் அஸ்வின், கபாலி, லிங்கேஷ், சுரேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஒளிப்பதிவாளர்களாக அறிமுகமாகியுள்ளனர். படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

7. கடமான் பாறை: நடிகர் மன்சூர் அலிகான், தன் மகன் அலிகான் துக்ளக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருக்கும் படம் தான் கடமான் பாறை. அலிகான் துக்ளக்கிற்கு ஜோடியாக அனுராகவி மற்றும் ஜெனி பெர்னாண்டஸ் என்ற புதுமுக நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மன்சூர் அலிகானின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கென்னடி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கடமான் பாறை படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் மன்சூர் அலிகானே செய்துள்ளார். இந்தப் படமும் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











