சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்! இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் லிஸ்ட் இதோ!
சென்னை: இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவுக்கு என்று எப்போதும் ஒரு மார்க்கெட் உண்டு. நூறு கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்யும் படங்கள் ரிலீஸ் ஆவது ஒரு புறம், நல்ல படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு ஒரு புறம், கதாநாயக பிம்பத்தை மைய்யப்படுத்தி உருவாக்கப்படும் படங்கள் ஒரு புறம் என ஆண்டுக்கு குறைந்தது 200இல் இருந்து 300 படங்கள் வரையிலும் கூட ரிலீஸ் ஆகின்றது.
மொத்தம் உள்ள 52 வாரங்கள், விழாக்காலங்கள் என ஆண்டுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்த 100 நாட்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு படங்கள் தொடங்கி, அதிகபட்சம் நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸ் ஆகின்றது. சில சமயங்களில் ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகியுள்ளது.
புதிதாக தமிழ் சினிமாவில் கால் பதித்த அனுபவமில்லாத புதிய தயாரிப்பாளர்கள் சரியான கதைத் தேர்வினால் இமயத்தை தொட்டுள்ளனர். அதேபோல் பல நூற்றுக்கணக்கான கோடிகளை தவறான கதையின் மீது கொட்டி கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களும் இருக்கின்றார்கள். இதே நிலைதான் இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும். இந்நிலையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.
போட்: இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் போட். இந்த பட இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதைப் போல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

ஜமா: கூழாங்கல் படத்தினை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. இந்த படத்தினை பாரி இளங்கோவன் இயக்கி நடித்துள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் கூத்துக் கலைஞர்களைப் பற்றியது என்பதால் இளையராஜா தனது இசையில் படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக படத்தின் இயக்குநர் பாரி இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூத்துக் கலைஞர்களை மைய்யப்படுத்திய பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்து அந்த படங்களின் இசை அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தினை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு அச்சு ராஜமணி மற்றும் விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளனர். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படமும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

பேச்சி: நடிகை காயத்ரி, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமச்சந்திரன் என்பவர் இந்த படத்தினை இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படமும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த வாரம் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதைக்களத்தினை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகும் வாரமாக இது இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications











