இந்த வார கேப்டன் பிரியங்கா... இனிமே தான் தரமான சம்பவம் இருக்கு !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை என்பதால், தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது.

கலக்கப்போவது யாரு என பெயர் வைக்கப்பட்ட இந்த டாஸ்கில், பிரியங்கா, ஐக்கி, சிபி, நிரூப் என 4 பேர் போட்டியிட்டனர்.

வித்தியாசமான டாஸ்க்

வித்தியாசமான டாஸ்க்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 44வது நாளை எட்டியுள்ளது. இதில் இன்று தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் நடைபெற்றது. இதில், தலைவர் போட்டியில் கலந்து கொள்ளாத மற்ற ஹவுஸ்மேட்களுக்கு கார்டன் ஏரியாவில் தனித்தனியாக ஒரு குடுவையில் சாயம் கலந்த நீர் வைக்கப்பட்டிருந்தது ஒருவர் பின் ஒருவராக வந்து சாயம் கலந்த நீரை யார் தலைவராக கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த நபரின் பெயரை சொல்லி கண்ணாடி பவுலில் ஊற்ற வேண்டும்.

களங்கம் இல்லாதவர்

களங்கம் இல்லாதவர்

அதே சமயம், சாயம் கலந்த நீரை ஊற்றாமல் தடுப்பதற்கு போட்டியாளர்கள் தங்களின் சிறந்த தனித்தன்மை மற்றும் குணாதிசயம் பற்றி கூறி, தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம். இறுதியில் யாருடைய கண்ணாடி பவுலில் குறைவான சாயம் உள்ளதோ, யாரை களங்கம் இல்லாதவர் என்று முத்திரை குத்துகிறார்களோ அந்த நபரே இந்த பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவர்.

ஜால்ரா அடிக்கும் பிரியங்கா

ஜால்ரா அடிக்கும் பிரியங்கா

இந்த போட்டி கார்டன் ஏரியாவில் நடைபெற்ற போது, ஐக்கி மாற்றி மாற்றி பேசுவார் என்றும், 40 நாட்களாக அவர் போட்ட வேஷம் களைந்துவிட்டது என்றும் பிரியங்கா கூறி வாக்கு கேட்டார். மேலும், ஐக்கி, பிரியங்கா எப்போது ஒரு சிலருக்கு ஜால்ரா அடிப்பார் என்றும் கேப்டனாக ஆனாலும் அதைத்தான் செய்வார் என்றும் கூறி வாக்கு கேட்டார்.

பிரியங்கா கேப்டன்

பிரியங்கா கேப்டன்

அதேபோல, நிரூப், போன வாரம் நான் கடந்து கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு சாயத்தை இதில் ஊற்றாதீர்கள் இந்த வாரம் கேப்டன் ஆனால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என்று கூறினார். இறுதியில் பிரியங்காவின் பவுலில் குறைந்த அளவு சாயம் இருந்ததால், அவர் இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், நாணயத்தை வைத்திருக்கும் பவானி மற்றும் நிரூப்பிடம் நாணயத்தை பயன்படுத்தி தலைவரை மாற்றும் எண்ணம் உள்ளதா என பிக் பாஸ் கேட்டார். இதற்கு இருவரும் நோ சொல்லிவிட்டதால் இந்த வாரத்தின் தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X