புஷ்பா 2வை காலி செய்ய வந்த படங்கள்.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான புஷ்பா 2 படம் வெளியானது. புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூலை அள்ளியதால் இரண்டாம் பாகத்திற்கு, பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
மிஸ் யூ: மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கிய திரைப்படம் மிஸ் யூ. இதில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் பெஞ்சல் புயல் வந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இப்படம் டிசம்பர் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூது கவ்வும் 2: நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடப்பில் 2013ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சூது கவ்வும். இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பின் சூது கவ்வும் 2 திரைப்படம் வரும் 13ந் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தில், ஷன்ஷித் ஷெட்டி, மிர்ச்சி சிவா, எம்.எஸ், பாஸ்கர், ராதா ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்: பரத், அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, அபிராமி என பலர் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்.இத்திரைப்படத்தை பிரசாத் முருகன் இயக்கி உள்ளார். கேப்டன் எம் பி ஆனந்த் தயாரித்திருக்கும் இப்படத்திற்க ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 13ந் தேதி வெளியாக உள்ளது.
Kraven the Hunter: ஹாலிவுட் திரைப்படமான கிராவன் தி ஹண்டர் மொழிமாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 13ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தில், ஆரோன் டெய்லர்-ஜான்சன் கிராவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அலெக்ஸே சிட்செவிச்,அலெஸாண்ட்ரோ நிவோலா, கலிப்ஸோ எசிலியாக அரியானா டிபோஸ், டிமிட்ரி ஸ்மெர்டியாக ஃப்ரெட் ஹெச்சிங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











