Bigg Boss Tamil 7: 5 பேர் உள்ளே.. 2 பேர் வெளியே.. இனியாவது சூடு பிடிக்குமா பிக் பாஸ் 7?
சென்னை: இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி படு போராக மாறிவிட்ட நிலையில், மூன்று மணி நேர நிகழ்ச்சி நடத்தி புதிதாக 5 போட்டியாளர்களை வைல்டு கார்டாக உள்ளே விட்டு ஹைப்பை அதிகரிக்க பிக் பாஸ் குழு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உள்ளே 5 பேர் சென்றால், இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்குமா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதே போல இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்கிற தகவல் தற்போது சனிக்கிழமை பிக் பாஸ் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கசிந்து விட்டது.

எல்லாமே மொக்கை: இந்த சீசனில் வித்தியாசமான போட்டியாளர்கள் வந்துள்ளனர் ஷோவே கலக்கப் போகுது என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எங்களை எல்லாம் நம்பியா பிக் பாஸ் பார்க்குறீங்க என கேட்கும் அளவுக்கு படு மொக்கையாக போட்டியாளர்கள் 2வது வாரத்திலேயே தங்கள் முகத்திரையை கிழித்து நிகழ்ச்சியையும் பரிதாபத்தில் தவிக்க விட்டுள்ளனர்.
5 வைல்டு கார்டு: எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு வாரத்தையாவது மறுபடியும் பார்த்து கமலுக்கு ஸ்கோர் கொடுக்க வேண்டும் என நினைத்த பிக் பாஸ் டீம் புதிதாக 5 போட்டியாளர்களை உள்ளே விட்டுள்ளனர். ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், விஜே அர்ச்சனா, ஆர்ஜே பிரேவோ, அன்னபாரதி மற்றும் கானா பாலா உள்ளிட்ட 5 பேரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பி உள்ளனர்.
டபுள் எலிமினேஷன்: இந்நிலையில், 5 பேரை அப்படியே உள்ளே விட்டால் வீடு தாங்காது என ரசிகர்களே ஐடியா கொடுத்து வந்த நிலையில், அதை அப்படியே டக்கென பிடித்துக் கொண்ட பிக் பாஸ் டீம் இந்த வாரம் டபுள் எலிமினேஷனை அமல்ப்படுத்தி உள்ளது.

பாரதி கண்ணம்மா கிளம்புமா?: பாரதி கண்ணம்மா சீரியலில் கடைசியில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா பிக் பாஸ் வீட்டில் ஜொலிப்பார் என எதிர்பார்த்தால் எதையுமே செய்யாமல் சும்மா பிக்னிக் வந்தவரை போல சுற்றிக் கொண்டு கன்டென்ட்டே கொடுக்காமல் இருந்த நிலையில், போன வாரமே போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார்.
யுகேந்திரன் எலிமினேட்: வயசானவர் லிஸ்ட்டில் அடுத்து உள்ளே இருக்கும் யுகேந்திரனையும் இந்த வாரம் சேர்த்தே அனுப்பி விட்டனர். அடுத்து வயசானவர் லிஸ்ட்டில் விசித்ரா தான் உள்ளார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











