Theatre Release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!

சென்னை: 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் : சேப்டர் 1 போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் கேப்டன் மில்லர், அயலான் படத்தை விட அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்தன.

இதையடுத்து, கடந்த வாரம் ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடித்த ப்ளூ ஸ்டார், யோகி பாபு நடித்த தூக்கு துரை போன்ற படங்களும் வெளியானது. கடந்த வாரம் வெளியான மூன்று படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகின்றன. இந்த வகையில் இந்த தியேட்டரில் வெளியாக உள்ள படம் என்னென்ன என்று பார்க்கலாம்.

Theatre Release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!

வடக்குப்பட்டி ராமசாமி: நடிகர் சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. அதில் பெரியாரை அவமதிக்கும் வகையில் வசனம் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Theatre Release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!

டெவில்: இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சவரக்கத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது, டெவில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 2ந் தேதி வெளியாக உள்ளது.

Theatre Release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!

லால் சலாம்: லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் இந்து மற்றும் இஸ்லாம் மத நல்லிணக்கம் மைய கருத்து பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Theatre Release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!

லவ்வர்: குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற இத்திரைப்படம் பிப்ரவரி 8ந் தேதி வெளியாக உள்ளது.

Theatre Release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!

சிக்லெட்ஸ்: இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 2ந் தேதி வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X