Gana Bala evicted: பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் கானா பாலா காலி.. இப்படி லீக் ஆகிடுச்சே!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் கானா பாலா தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டதை போலவே அவர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ஜூனியர், கேபிஒய் சாம்பியன்ஸ், நடன நிகழ்ச்சி என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை மற்ற சேனல்களை விட அதிகம் கட்டிப் போட்டும் கனெக்ட் செய்தும் வருகிறது.

அதிலும், மக்களுடன் தினமும் ஓட்டுப் போட வைத்து தொடர்பில் இருக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஆனால், ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் சமீப காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகின்றன.
நாமினேஷனில் சிக்கியவர்கள்: கடந்த வாரம் நீங்க பண்ண பஞ்சாயத்தே போதும் என கமல் சாரே அடக்கி வாசிக்க சொல்லிட்டாரா? என்னவோ தெரியவில்லை. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே போர் அடிக்கிறது. இந்த வாரம் விசித்ரா, ரவீனா, மணிசந்திரா, பூர்ணிமா, ஆர்ஜே பிராவோ, கானா பாலா, அக்ஷயா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கினர்.
கடந்த வாரம் ஐஷூ வெளியேறிய நிலையில், இந்த வாரம் நிக்சன் நாமினேஷனுக்கு வந்திருந்தால் அவரையும் தொக்காக ரசிகர்கள் தூக்கி அடித்திருப்பார்கள். ஆனால், மிஸ் ஆகி விட்டார். அதே போல மாயாவும் இந்த வாரம் எஸ்கேப்.
ஃபர்ஸ்ட் சேஃப்: விசித்ராவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்து வந்த நிலையில், பிரதீப் ஆண்டனி பற்றி தவறாக அவரும் பேச ஆரம்பித்ததை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஓட்டுக்களை போடுவதை குறைத்து விட்டனர். இந்த வாரம் ரவீனா தான் விசித்ராவை விட அதிக ஓட்டுகளை பெற்று முதலில் சேவ் ஆகி உள்ளாராம். அவரை தொடர்ந்து விசித்ரா, மணி, பூர்ணிமா, பிராவோ உள்ளிட்ட போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
விக்ரமுக்கு அல்லு விட்றுச்சு: இந்நிலையில், இந்த வாரம் வெளியேறும் விளிம்பில் இருப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் குறைவான ஓட்டுக்களுடம் அக்ஷயா, கானா பாலா மற்றும் விக்ரம் என மூவருமே டேஞ்சர் ஜோனில் இருந்தனர். சனிக்கிழமை நடைபெற்ற ஷூட்டிங்கில் விக்ரம் கடைசி இடத்தில் இருப்பதை அறிந்து அவருக்கு உள்ளுக்குள் பயம் ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கானா பாலா காலி: யார் வம்புக்கும் தும்புக்கும் போகாமல் இருந்த கானா பாலா இந்த சண்டை ஷோவுக்கு நீங்க செட்டாக மாட்டீங்க என சொல்லி இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அவரை கமல்ஹாசன் எவிக்ஷன் கார்டு காட்டி வெளியே அனுப்பி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











