This week Movies Release: இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1 போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இம்மூன்று படங்களில் கேப்டன் மில்லர், அயலான் படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. ஆனால், மிஷன் சேப்டர் 1 படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் பொங்கலுக்கு வெளியாகி விட்டதால், கடந்த வாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால், இந்த வாரம் ஜனவரி 25 மற்றும் ஜனவரி 26ந் தேதியில் ஒரு சில படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளன. அவை என்னென்ன படம் என்பதை பார்க்கலாம்.
தூக்குத்துரை: ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் தூக்குதுரை. இப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் ஜனவரி 25ந் தேதி அன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.

105 மினிட்ஸ் (தெலுங்கு): ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள 105 மினிட்ஸ் திரைப்படம் ஜனவரி 26ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹான்சிகாவைத் தவிர வேறுயாரும் இல்லை. பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். அதே போல, 105 மினிட்ஸ் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜு டுஸ்ஸா எழுதி இயக்கியுள்ளார். பொம்மக் சிவா தனது ருத்ரன்ஷ் செலுலாய்ட் சார்பில் தயாரித்துள்ளார். விக்ரம் வேதா கைதி படங்களின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க கிஷோர் பொயிடபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கேப்டன் மில்லர் (தெலுங்கு): அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகி வசூலை அள்ளியது. இப்படம் முதல் நாளில் வசூலை அள்ளிய நிலையில், அடுத்தடுத்த நாளில் வசூல் கணிசமாக குறைந்தது. இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தெலுங்கு பதிவு வரும் 26ந் தேதி வெளியாக உள்ளது. தமிழில் அயலான், கேப்டன் மில்லர் போட்டிப்போட்ட நிலையில், தற்போது தெலுங்கிலும் இரண்டு படமும் 26ந் தேதி வெளியாக உள்ளது.

பிரதிநிதி 2 (தெலுங்கு): தெலுங்கு நடிகர் நாரா ரோஹித்தின் 19வது திரைப்படமான பிரதிநிதி 2 திரைப்படம் ஜனவரி 25ந் தேதி வெளியாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படமான பிரதிநிதி படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை மூர்த்தி தேவகுப்தாபு இயக்கவுள்ளார். வனரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் குமார்ராசா பத்துலா, ஆஞ்சநேயுலு ஸ்ரீ தோட்டா மற்றும் கொண்டகல்லா ரெஜேந்தர் ரெட்டி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மஹதி ஸ்வர சாகர் இசையமைக்க, நானி சமிதிஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பாளராகவும், கிரண் குமார் மன்னே கலை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.



Click it and Unblock the Notifications











