“உள்ளதை உள்ளப்படி காட்டும் கண்ணாடி“… டாஸ்கால் சண்டையை மூட்டி விட்ட பிக்பாஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து விதவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், நிரூப்பிற்கும் வருணுக்கும் அடி தடி தள்ளுமுள்ளு ஏற்படும் அளவுக்கு சென்றது.
இந்த வாரமும் உள்ளதை உள்ளப்படி காட்டும் கண்ணாடி என்ற தலைப்பில் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளதை உள்ளப்படி காட்டும் கண்ணாடி
நம்மை நமக்கு அறிமுகப்படுத்தும் ஒரு கருவி தான் கண்ணாடி. கோபம் அழுகை இப்படி எல்லா வித உணர்ச்சிகளை உண்மையாக நாம் பகிர்ந்து கொள்ளும் ஒரே இடம் கண்ணாடி, அப்படிபட்ட கண்ணாடியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே உங்களின் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க். இந்த டாஸ்கிற்கு உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளாக
இந்த டாஸ்க்கிற்காக 'ஏ' மற்றும் பி டீம் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்தனர். ஒவ்வொரு நபரும் எதிரணியில் இருக்கும் நபரின் கண்ணாடி பிம்பமாக பிரதிபலிக்க வேண்டும். மேலும், பிரதிபலிக்கும் நபர் அவரைப்போலவே தயாராக வேண்டும்.

மனதில் நினைப்பதை
பெல் அடித்தவுடன் எதிரணியில் இருக்கும் நபரைப்போலவே நாள் முழுவதும் இருக்க வேண்டும் , அவர் செய்யும் செயல்களை செய்ய வேண்டும். இறுதியில் எதிரில் இருக்கும் நபர் குறித்து தன் மனதில் நினைத்ததை கைகளை பிடித்துக்கொண்டு முகத்தை பார்த்து சொல்ல வேண்டும். எதிரில் இருக்கும் நபர் பேசியது பிடிக்கவில்லை என்றால், தங்களிடம் இருக்கும் பேஜ்சை அவரிடம் தந்துவிட்டு வெளியேற வேண்டும். இறுதியில் எந்த அணியிடம் அதிக பேஜ் உள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வித்தியாசமான டாஸ்க்
மனதில் உள்ளதை அப்படியே சொல்ல வேண்டும் என்ற டாஸ்கை கொடுத்து போட்டியாளர்கள் இடையே சிண்டு முடிந்துள்ளார் பிக் பாஸ். இந்த டாஸ்கால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் என்னவெல்லாம் பிரச்சினை வரப்போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











