Bigg Boss 7 - பவா செல்லதுரையால் தப்பித்த மாயா?.. பிக்பாஸ் 7ல் என்ன நடக்கப்போகுது தெரியுமா?

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) எழுத்தாளர் பவா செல்லதுரை பிக்பாஸ் 7லிருந்து வெளியேறியதால் இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்காது என கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த 1ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது. இரண்டு வீடுகளில் நடக்கும் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட 18 பேரில் ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் ஓரளவு மட்டுமே பிரபலமடைந்தவர்கள். இதன் காரணமாக இந்த சீசன் சுவாரசியமாக நகருமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்தது.

This Week No Elimination in Bigg Boss 7

சுவாரசியம்: ஆனால் அவர்களின் சந்தேகத்தை போக்கு விதமாகத்தான் நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கிறது. முதல் வாரமே எவிக்‌ஷனுக்கான நாமினேஷனில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் பவா செல்லதுரையோ இல்லை யுகேந்திரனோ வெளியேறுவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அனன்யா வீட்டிலிருந்து வெளியே சென்றார். இப்படி எலிமினேஷனில்கூட இந்த சீசன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க வீட்டிலோ சண்டை சக்கை வாங்குகிறது. பிரதீப் ஆண்டனி ஆரம்பித்து வைத்த சண்டை டோன் இப்போது பலரையும் பிடித்திருக்கிறது. விஜய் வர்மா பிரதீப் ஆண்டனியை பேசியதைத் தொடர்ந்து சரவண விக்ரமுக்கும், விஷ்ணுவுக்கும் முட்டிக்கொண்டது. அதேபோல் நிக்சன் பிரதீப் ஆண்டனியை என்னை பற்றி பேச உனக்கு எந்தத் தகுதியுமே இல்லை என்று ஒருமையில் பேசினார். அதுமட்டுமின்றி மூடிட்டு உட்காரு என்றும் உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்றிருக்கிறார்.

வெளியேறிய பவா: இதற்கிடையே எழுத்தாளர் பவா செல்லதுரை சில நாட்களுக்கு முன்பு தாமாகவே வெளியேற விரும்பினார். அவரது விருப்பத்தையும் பிக்பாஸ் நிறைவேற்றிவைத்தார். கிளம்புவதற்கு முன்பு பிக்பாஸிடம் பேசிய பவா செல்லதுரை, இங்கு வன்மம் அதிகம் நிறைந்திருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியேறியதை அடுத்து இன்னொரு போட்டியாளர் ஒருவர் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

This Week No Elimination in Bigg Boss 7

நோ எவிக்‌ஷன்: இந்நிலையில் பவா செல்லதுரை தாமாகவே வெளியேறிவிட்டதால் இப்போது வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதன் காரணமாக இன்னொரு போட்டியாளர் வரவிருக்கும் சூழலில் இந்த வாரம் எவிக்‌ஷன் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. ஒருவேளை எவிக்‌ஷன் நடந்தால் மாயாதான் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பார் என்று ஒரு தகவல் உலாவுவது குறிப்பிடத்தக்கது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பவா செல்லதுரையால் இந்த வாரம் மாயா தப்பித்துவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்கின்றனர். அதேபோல் மாயாவும் தாமாகவே வெளியேற விருப்பம் தெரிவித்ததாகவும் அவரை சேனல் நிர்வாகம் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X