Theatre release Movies: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: மிகப்பெரிய பட்ஜெட்டில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியானத் திரைப்படமான கங்குவா, நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனத்தால், பெட்டிக்குள் சென்றுவிட்டது.அதேபோல இந்த வாரம் வெளியான படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால் சினிமா பிரியர்கள் கவலையில் உள்ளனர். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த வாரம் பல திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

சொர்க்க வாசல்: ஆர்.ஜே.பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் சொர்க்கவாசல். இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கி உள்ளார். இதில், ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி என்கிற நட்ராஜ், சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ஜான்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறையில் நடக்கும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவானத் இத்திரைப்படம் வரும் 29ந் தேதி வெளியாக உள்ளது.

theatre release movies

மிஸ் யூ: நடிகர் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சித்தார்த் நடித்த இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால், அந்த படம் மோசமான விமர்சனத்தை சந்தித்தது. தற்போது, சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள மிஸ் யூ படம் 29ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை ராஜசேகர் என்பவர் இயக்கி உள்ளார். இதில், சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கன் நடித்துள்ளார்.

theatre release movies

பரமன்: பழ.கருப்பையா, வையாபுரி, ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பரமன்.விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ளார். தமீம் அன்சாரி இசையமைத்துள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

theatre release movies

சாதுவன்: சின்ன பட்ஜெட் திரைப்படமான சாதுவன் படத்தில்,விஜய் விஸ்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் வரும் 29-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கி இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இதில், கதாநாயகியாக நடிகை ரஷ்மிதா, கலையரசன், காசி சக்திவேல், இளங்கோ, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

theatre release movies

பைரதி ரணங்கள்: நடிகர் சிவராஜ்குமார் நடித்த கன்னடப் படமான, 'பைரதி ரணங்கள்' தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் தெலுங்கு நட்சத்திரம் நானி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நடித்துள்ளனர்.

theatre release movies

மோனா 2: 2016ம் ஆண்டு வெளியான மோனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான மோனா 2 என்ற பெயரில் நவம்பர் 29ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. அனிமேஷன் இப்படத்தில் முன்னோர்களை சாபத்தில் இருந்து விடுவிக்க, ஓசியானியாவின் தொலைதூர கடல்களுக்கு அவர்கள் பயணிக்கின்றனர். அப்போது அவர்கள், காகமோரா மற்றும் பாதாள உலக தெய்வம் மாதங்கி உட்பட புதிய எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

சப்தம்: ஆதி பினிசெட்டி மற்றும் லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் சப்தம். திகில் திரைப்படமான இப்படத்தில், ஒரு பெண் கல்லூரியில் தற்கொலை செய்து கொள்கிறாள் இதனால், அந்த பள்ளியில் பலவிதமான, அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது. இதை கல்லூரியின் ஆசிரியராக இருக்கும், ஆதி, இந்த பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு, வினோதமான சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மையை ஆராயத் தொடங்குகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. இப்படம் நவம்பர் 30ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X