பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒருத்தர் 'அவுட்'.. ஒருத்தர் 'இன்'.. பரபரக்கும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒருவர் வெளியேறுவதும் ஒருவர் புதுவரவாக வீட்டுக்குள் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் நாமினேஷன் புராசஸ் நேற்று நடைபெற்றது. இதில் முக்கால்வாசி ஹவுஸ்மேட்ஸ் சனம் ஷெட்டியின் பெயரையே நாமினேட் செய்துள்ளனர்.

அதிகப்பட்சமாக அவர்களில் சனம் ஷெட்டி 11 வாக்குகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளார்.

புதிய டாஸ்க்

புதிய டாஸ்க்

இந்நிலையில் எவிக்ஷனில் இருந்து எஸ்கேப் ஆகும் வகையில் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் இன்று ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார். அதில் வெற்றி பெறுபவர்கள் எவிக்ஷனில் இருந்து தப்பிக்கலாம் என தெரிகிறது.

ஒருவர் உள்ளே வருவார்

ஒருவர் உள்ளே வருவார்

இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்றும் புது ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார் என்றும் தகவல் கசிந்துள்ளது. அதாவது இருமுறை பிக்பாஸ் வீடு வரை வந்து பங்கேற்க முடியாமல் போன அர்ச்சனாதான் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜே அர்ச்சனா

விஜே அர்ச்சனா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் அர்ச்சனா. கலகலப்பான தொகுப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தீவிரமாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

போட்டியாளர் அறிமுக நிகழ்ச்சியின் போதும் கூட ஸ்டேஜ் வரை அர்ச்சனா வந்ததாகவும் ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சி சட்ட வல்லுநர்கள் கடைசி நேரத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக அர்ச்சனா பங்கேற்க முடியாமல் போனது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Day 9 | Housemates in Vijay Style • Nomination
வரும் வாரங்களில்

வரும் வாரங்களில்

இந்நிலையில் ஜீ தமிழ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய, அர்ச்சனா சட்ட சிக்கல்களையெல்லாம் சரி செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடந்த ஒருவாரமாக ஹோம் குவாரண்டைனில் உள்ள அர்ச்சனா, வரும் வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X