twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன்.. அதிரடியாக அறிவித்த கமல்.. என்ன இந்த முறை மிக்சரை எல்லாம் தூக்குறாங்க?

    |

    சென்னை: போன வாரம் அப்பா ராபர்ட் மாஸ்டர் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் அன்பு மகள் குயின்ஸியை வீட்டுக்கே போய் சாப்பிட்டு தூங்குமா என கமல் எவிக்ட் செய்து அனுப்பி வைத்தார்.

    அப்படியே விட்டு விடாமல் நாமினேஷனுக்கு முன்னாடியே பார்த்து பண்ணுங்க என்பதை போல, அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கு என ஒரே போடாக போட்டதும் பிக் பாஸ் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.

    இந்த வாரமே டபுள் எவிக்‌ஷன் இருக்காதா என நாமினேஷன் பட்டியல் வந்ததுமே ரசிகர்கள் மிக்சர் போட்டியாளர்களை வெளியே அனுப்ப ஆவலாய் இருந்தது தனிக்கதை.

    தனலட்சுமி விஷப்பாம்பு..ரச்சிதா பற்றி எதுவும் கேட்காதீங்க..பேட்டியில் மனம் திறந்த ராபர்ட் மாஸ்டர்!தனலட்சுமி விஷப்பாம்பு..ரச்சிதா பற்றி எதுவும் கேட்காதீங்க..பேட்டியில் மனம் திறந்த ராபர்ட் மாஸ்டர்!

    மிக்சரே இருக்கக் கூடாது

    மிக்சரே இருக்கக் கூடாது

    இந்த முறை மிக்சர் போட்டியாளர்களே இருக்கக் கூடாது என பிளான் பண்ணித் தான் அதிகம் அறிமுகம் ஆகாத பல்வேறு துறையை சார்ந்த போட்டியாளர்களை 6வது சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறக்கினர். ஆனால், ஆரம்பத்தில் பர்ஃபார்ம் பண்ணி விட்டு ராஜு பாய் போல சொகுசாக செட்டில் ஆகி விடலாம் என சிலர் நினைத்து பெரிய தவறை செய்த நிலையில், உள்ளே மிக்சர்களாக இருக்கும் போட்டியாளர்களை இந்தியன் தாத்தா கமல் களையெடுத்து வருகிறார்.

    குயின்ஸி எவிக்டட்

    குயின்ஸி எவிக்டட்

    இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் வைக்கும் போது குயின்ஸி முகத்தில் கூட க்ரீன் சரியாக அப்பப்படவில்லை என அசீம் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அந்த அளவுக்கு ஃபேவரிஸம் இருக்கும் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருக்கக் கூடாது என ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக குயின்ஸிக்கு ஓட்டுப் போடாமல் இந்த வாரம் பொட்டிப் படுக்கையுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

    கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு

    கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு

    பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணனுக்கு கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது போல குயின்ஸிக்கு கமல்ஹாசனின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். செந்தமிழ் பேசிய குயின்ஸியை வெகுவாக கமல் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நான் தான் போவேன்

    நான் தான் போவேன்

    இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருந்த ஜனனி, மைனா நந்தினி இருவருமே வருத்தப்பட்டது போல கொஞ்சம் கூட தெரியவில்லை. நாங்க ரெண்டு பேரும் போக மாட்டோம்னு ரொம்ப தெளிவா இருக்க, முதல் ஆளாக நான் தான் வெளியேறுவேன் என சொல்லி எவிக்ட் ஆனார் குயின்ஸி.

    அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன்

    அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன்

    இந்த வாரம் நாமினேஷனில் சிக்காமல் எஸ்கேப்பான மணிகண்டன், ஏடிகேவை எல்லாம் அடுத்த வாரம் நாமினேஷனுக்கு கொண்டு வந்து வெளியே துரத்தி விடுங்க பாஸ் என கமல் அதிரடியாக டபுள் எவிக்‌ஷன் அடுத்த வாரம் இருக்கு என சொன்னதில் இருந்தே பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ரச்சிதா, மைனா நந்தினி, ஜனனி என வெளியேற்றுவதற்கு ஒரு பெரிய பட்டியலே ரசிகர்கள் போட்டு வருகின்றனர்.

    வைல்டு கார்டு இருக்கா

    வைல்டு கார்டு இருக்கா

    57 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இந்த சீசனில் இதுக்கு மேல வைல்டு கார்டு போட்டியாளர் வருவாரா? என்கிற கேள்வியும் அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன் உள்ள நிலையில், நிச்சயம் ஒரு புது வரவு பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    English summary
    This Week Queency evicted and Next week Double Eviction in Bigg Boss Tamil 6 host Kamal Haasan officially announced it in end of the Sunday episode and shocks Bigg Boss housemates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X