சர்ச்சையை ஏற்படுத்திய ரயில் முதல் துப்பாக்கி ரீ ரிலீஸ் வரை! இந்த வாரம் வெளியாகும் படங்கள் லிஸ்ட்!
சென்னை: இந்தியாவில் முன்னணி சினிமா இண்ட்ஸ்ட்ரிகளில் தமிழ் சினிமா இண்டஸ்டிரியும் ஒன்று. ஆண்டுக்கு சுமார் தமிழ் 200 படங்கள் நேரடியாக ரிலீசாகின்றன. அதாவது மொத்தம் உள்ள 52 வாரங்களுக்கு ஒரு வாரத்திற்கு சராசரியாக நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் அனைத்து படங்களும் வெற்றி பெறுவதில்லை என்றாலும் கனிசமான அளவு வசூலைக் குவிக்கும் படங்கள் தொடங்கி 500 கோடிகளுக்கு மேல் பணத்தை அள்ளும் படங்கள் வரை வெளியாகின்றன. அதேநேரத்தில் தரமான கதையம்சம் கொண்ட படங்களும் வெளியாகின்றது.
கடந்த வாரத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. கடந்த 14ஆம் தேதி வெளியான இந்த படம் இதுவரை ரூபாய் 32.6 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தவாரம் அதாவது வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள மற்றும் ரீ ரிலீஸ் ஆகவுள்ள படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
1. ரயில்: வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'ரயில்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகின்றார். இப்படத்தில், இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் அரசியல் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இந்த படத்திற்கு வடக்கன் எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

2. லாந்தர்: ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள லாந்தர் திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் வரும் 21ஆம் தேதி வெளியாகின்றது.

3. பயமறியா பிரம்மை: 69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இருக்கும் பயமறியா பிரம்மை படம் வரும் 21ஆம் தேதி வெளியாகின்றது.

4. சட்டம் என் கையில்: ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி.ராஜஸ்வரராவ் தயாரிப்பில் ஏ.அபிராமு இயக்கத்தில் வெளியான தெலுங்குத் படத்தை சட்டம் என் கையில் என தமிழில் டப்பிங் செய்து படக்குழு வெளியிடவுள்ளது. இப்படத்தில் சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சத்யபிரகாஷ், தீபாவளி தீபு, நாகமகேஷ் விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமும் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ரீ-ரிலீஸ் படங்கள்: விஜய் தனது 50வது பிறந்த நாளை வரும் 22ஆம் தேதி கொண்டாடவுள்ளதால், 21ஆம் தேதி அவரது நடிப்பில் வெளியான துப்பாக்கி மற்றும் போக்கிரி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. அதேபோல் அடுத்த மாதத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளதால் கடந்த வாரம் இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானது.

இந்நிலையில் கமல் ரசிகர்களுக்கு ஆவலைக் கூட்டும் விதமாக குணா படமும் வரும் 21ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











