Friday Release: இந்த வாரம் தியேட்டரில் 5 படங்கள் ரிலீஸ் ஆகின்றன?.. கம்பேக் கொடுக்குமா கோலிவுட்?

சென்னை: இந்த ஆண்டு இதுவரை பாலிவுட் முதல் கோலிவுட் வரை அடிவாங்கித்தான் வருகிறது. ஃபைட்டர் திரைப்படம் பாலிவுட்டில் பெரிதாக ஓடவில்லை. டோலிவுட்டில் ஹனுமான் படம் மட்டுமே வசூல் ஈட்டியிருக்கிறது. குண்டூர் காரம் ஃபிளாப். கோலிவுட்டில் வெளியான அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்கள் சொதப்பி விட்டன. மலையாள சினிமா தான் இதுவரை 2024ல் சிறந்த படங்களை கொடுத்து வசூல் ஈட்டி வருகிறது.

இந்த வாரம் ஓடிடியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பார்க்க ப்ளூ ஸ்டார் படம் மட்டுமே இன்று வெளியாகி இருக்கிறது. மற்றபடி ஓடிடியில் பெரிதாக தமிழ் படங்கள், வெப்சீரிஸ்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், தியேட்டர்களில் என்ன என்ன படங்கள் வெளியாகின்றன என்கிற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

This Week Theater Release Movies: Will Joshua and Por makes a comeback for Kollywood?

ஜோஷுவா இமைபோல் காக்க: கெளதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் மற்றும் ஆரவ்வின் மனைவி ராஹேய் நடித்துள்ள ஜோஷுவா இமைபோல் காக்க திரைப்படம் பல வருடங்கள் கழித்து ஒரு வழியாக இந்த வாரம் மார்ச் 1ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், பல வருடங்கள் கழித்து உருவாகி உள்ள இந்த படம் எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது சந்தேகம் தான்.

https://tamil.mykhel.com/cricket/ipl-2024-more-than-10-csk-players-couldnt-participate-in-the-csk-practice-camp-due-to-internation-052161.html

போர்: பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி உள்ள போர் திரைப்படமும் மார்ச் 1ம் தேதி இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் படி இருந்தாலும், அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராமை தியேட்டருக்குச் சென்று ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்றால் படத்தின் திரைக்கதை மற்றும் மேக்கிங் வேறலெவலில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.mykhel.com/cricket/ipl-2024-more-than-10-csk-players-couldnt-participate-in-the-csk-practice-camp-due-to-internation-052161.html

மங்கை: கயல் ஆனந்தி மற்றும் பிக் பாஸ் ஷிவின் நடிப்பில் உருவாகி உள்ள மங்கை திரைப்படம் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் என புரமோஷன் எல்லாம் செய்துள்ளனர். ஆனால், அந்த படத்தை தயாரித்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், அந்த படம் வெளியாகுமா? என்பதே சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.

https://tamil.mykhel.com/cricket/ipl-2024-more-than-10-csk-players-couldnt-participate-in-the-csk-practice-camp-due-to-internation-052161.html

அதோமுகம்: சுனில் தேவ் இயக்கத்தில் எஸ்.பி. சித்தார்த் மற்றும் சைதன்யா பிரதாப் நடிப்பில் வித்தியாசமாக உருவாகி உள்ள அதோமுகம் படமும் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அனைவருமே அறிமுகங்கள் என்பதால் எந்தளவுக்கு தியேட்டரில் இந்த படத்துக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான்.

This Week Theater Release Movies: Will Joshua and Por makes a comeback for Kollywood?

சத்தமின்றி முத்தம் தா: ரோஜாக் கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள சத்தமின்றி முத்தம் தா படமும் இந்த வாரம் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பிரியங்கா திம்மெல் நடித்துள்ள படம் தியேட்டர்களை நிரப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த 5 படங்களில் போர் மற்றும் ஜோஷுவா படங்கள் தான் ஓரளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கோலிவுட்டை காப்பாற்ற இன்னும் வெயிட்டான ஒரு படமாவது வெளியாக வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X