இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்.. அயோத்தி, பஹிரா இடையே கடும் போட்டி !

சென்னை : பிப்ரவரி தொடக்கத்தில் பல படங்கள் வெளியான நிலையில், கடந்த வாரம், தனுஷ் நடித்த வாத்தி, டாடா, பகாசூரன் திரைப்படங்கள் வெளியான கலவையான விமர்சனங்களை பெற்றன.

இதையடுத்து இந்த வாரம் சகிக்குமார் நடித்த அயோத்தி, பஹிரா, பல்லுபடாம பாத்துக்கோ போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த பஹிரா படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன் கார்

இன் கார்

இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் லீட் ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் 'இன் கார்' வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக மார்ச் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 அயோத்தி

அயோத்தி


மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் அயோத்தி. இதில், குக் வித் கோமாளி புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 3 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கடுவா

கடுவா

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் கடுவா தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மார்ச் 3ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இப்படம் மலையாளத்தில் 50 கோடிக்கு மேல் வசூலித்தது.

பல்லுபடாம பாத்துக்கோ

பல்லுபடாம பாத்துக்கோ

Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ் உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'பல்லுபடாம பாத்துக்கோ'. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் கிடந்த படம் மார்ச் 3ந் தேதி வெளியாக உள்ளது.

பஹிரா

பஹிரா

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, AAA உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா பலவிதமான கெட்டப்பில் நடித்துள்ளார், இதில், அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், நாசர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 03 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அரியவன்

அரியவன்

இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள அரியவன் படம் மார்ச் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. ஈஷான் நாயகனாகவும், ப்ராணலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த திரைப்படம் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

More from Filmibeat

Read more about: ayodhi bagheera பஹிரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X