Theatre Release : இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை : இந்த மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வாரம் கண்ணை நம்பாதே, கப்ஜா என இரண்டு படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகின.

ஆனால் ஓடிடியில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை, பதான், அயோத்தி, பகாசூரன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

இதனால், திரையரங்கில் இந்த வாரம், சிறிய பட்ஜெட் படங்களே வெளியாக உள்ளன.

ஜம்பு மகரிஷி

ஜம்பு மகரிஷி

திருச்சி அருகே திருவானை காவலில் ஜீவசமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஜம்பு மகரிஷி. இப்படத்தில் புதுமுகம் பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் பிரியா நடித்துள்ளார். மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மார்ச் 23ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

குற்றப்பின்னணி

குற்றப்பின்னணி

இஸ்மாயில் இயக்கத்தில் ராட்சசன் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் குற்றப்பின்னணி. இதில், தீபாலி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் போன்றோர் லீட்ரோலில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது.

“Bheed” இந்தி

“Bheed” இந்தி

முல்க், ஆர்டிகல் 15, தப்பாட் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹா உருவாகி உள்ள திரைப்படம் "Bheed," இதில் ராஜ்குமார் ராவ், பூமி பெட்னேகர், தியா மிர்சா, அசுதோஷ் ராணா, பங்கஜ் கபூர் மற்றும் கிருத்திகா கம்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 24ந் தேதி வெளியாக உள்ளது.

கீதா சாக்ஷிகா (தெலுங்கு)

கீதா சாக்ஷிகா (தெலுங்கு)

அந்தோணி மாட்டிபள்ளி இயக்கிய திரில்லர் திரைப்படம் கீதா சாக்ஷிகா. இத்திரைப்படத்தில் ஆதர்ஷ், சித்ரா சுக்லா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ரூபேஷ் ஷெட்டி, முக்கிய கேரக்டரிலும், அனிதா சௌத்ரி, ராஜா ரவீந்திரன், பரணி சங்கர், ஜெயஸ்ரீ எஸ் ராஜேஷ் மற்றும் பலர் துணை வேடத்திலும் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X