This Week Theatre Release: வேட்டையாடு விளையாடு முதல் தூமம் வரை... இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த வாரமும் அதிகமான தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ளதால், சின்ன பட்ஜெட் படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

அதேநேரம் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் இந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி வேட்டையாடு விளையாடு உடன் இந்த வாரம் ரிலீஸாகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

 This Week Theatre Release: Vettaiyaadu Vilaiyaadu, Dhoomam, and more films will release this week

இந்தவாரம் தியேட்டர் ரிலீஸ்: கோடை விடுமுறையை தொடர்ந்து இந்த வாரம் சில தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. இதில், ஃபஹத் பாசிலின் தூமம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள தூமம், ஃபஹத் பாசில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என சொல்லப்படுகிறது. பவன் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஃபஹத் பாசிலுடன் அபர்ணா பாலமுரளி, ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்துள்ளனர்.

அதேபோல், கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படமும் இந்த வாரம் 23ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமலுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். "எதோ ஏன் கண்ணு வேணும்ன்னு கேட்டியாமே" என ராகவன் ஐபிஎஸ்ஸாக மிரட்டிய கமல்ஹாசனை மீண்டும் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படம் புதுப்பொலிவுடன் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனைனா நாயகியாக நடித்துள்ள ரெஜினா திரைப்படமும் இந்த வாரம் ரிலீஸாகிறது. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான சுனைனா, மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். டொமின் டிசெல்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் பசுபதி நடித்துள்ள தண்டட்டி திரைப்படமும் இந்த வாரம் ரிலீஸாகிறது. காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ராம் சங்கையா இயக்கியுள்ளார். பசுபதியுடன் ரோகிணி, அம்மு அபிராமி ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் சினிமா ரசிகர்களுக்காக 'அஸ்வின்ஸ்' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வசந்த் ரவி, விமலா ராமன் நடித்துள்ள அஸ்வின்ஸ், பிளாக் டூரிசம் பின்னணியில் ஹாரர் படமாக உருவாகியுள்ளது. தருண் தேஜா இயக்கியுள்ள அஸ்வின்ஸ் படத்து ஹாரர் சினிமா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், சுந்தர் சி நடித்துள்ள தலைநகரம் 2ம் பாகமும் இந்த வாரம் 23ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை VZ துரை இயக்கியுள்ளார்.

மேலும், விக்ரம் பிரபு நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படமும் இந்த வாரம் ரிலீஸாகிறது. பொன்னியின் செல்வன் வெளியான பிறகு விக்ரம் பிரபுவின் படங்களுக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல், லியோ சிவகுமார் நடித்துள்ள அழகிய கண்ணே மூவியும் இந்த வாரம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X