Top 5 serials in TN: இந்த வாரத்தில் டாப் 5 இடங்களை பிடித்த 5 சீரியல்கள்.. எதிர்நீச்சல்தான் பர்ஸ்ட்!
சென்னை: இந்த வாரத்திற்கான Urban and Rural கேட்டகரியில் அதிக டிஆர்பி புள்ளிகளை பிடித்து முதல் 5 இடங்களை பிடித்த சீரியல்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த டிஆர்பி புள்ளிகளில் அதிக புள்ளிகளை பிடித்துள்ள தொலைக்காட்சித் தொடராக எதிர்நீச்சல் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துவந்த மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தற்போது இந்தத் தொடர் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.

தமிழகத்தில் முதல் 5 இடங்களை பிடித்த சீரியல்கள்: தமிழக அளவில் இந்த வாரத்திற்கான சீரியல்களின் டிஆர்பி புள்ளிகள் வெளியாகியுள்ளன. வாரந்தோறும் வெளியாகும் இந்த புள்ளிகளின்மூலம் அந்தந்த வாரத்திற்கான முன்னணி சீரியல்களின் நிலை வெளியாகி வருகிறது. அந்தவகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி புள்ளிகளில் அதிக எண்ணிக்கையை பெற்று எதிர்நீச்சல் தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக முன்னிலையில் இருந்த இந்தத் தொடர், கடந்த வாரத்தில் பின்னடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி புள்ளிகளில் 10.79 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துவ்நத நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தற்போது இந்த சீரியல் அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. அவரது இழப்பும் இந்தத் தொடர் முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவரது நடிப்பில் இறுதி எபிசோட்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.
சமீப காலங்களில் ஆதி குணசேகரனாகவே பார்க்கப்பட்டார் மாரிமுத்து. அவரது உடல் மொழி, டயலாக் டெலிவரி உள்ளிட்டவை மிகுந்த பாராட்டுக்களுக்கு உள்ளாகின. இந்தாம்மா ஏய் என்ற அவரது ஒரே டயலாக் மிகுந்த கவனத்தையும் பாராட்டையும் பெற்ற நிலையில், அவரது மறைவு சீரியலுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிக்க நடிகர் வேல ராமமூர்த்தி அல்லது ராதாரவி போன்ற நடிகர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வார Urban மற்றும் Rural கேட்டகரியில் அதிகமான புள்ளிகளை பெற்று தமிழக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது கயல் தொடர். இந்தத் தொடர் பெற்றுள்ள புள்ளிகள் 10.74. இந்தத் தொடரில் கயலாக வரும் கேரக்டர் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமாக அமைந்துள்ளது இந்தத் தொடரின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தனி ஒருத்தியாக தன்னுடைய குடும்பத்தின் அனைத்து சவால்களையும் சந்திக்கும் கயலின் பயணத்தில் ரசிகர்களும் இணைந்தே பயணித்து வருகின்றனர்.

அடுத்ததாக சுந்தரி தொடர் 9.79 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நிலைப்பெற்றுள்ளது. அடுத்தடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் வானத்தை போல மற்றும் இனியா தொடர்கள் 9.53 மற்றும் 8.82 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன்பே தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ள இனியாவும் மாஸான எபிசோட்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். தன்னுடைய மாமனாரின் பிற்போக்குத்தனத்தை தன்னுடைய கணவனின் உதவியுடன் அடுத்தடுத்து முறியடித்து வருகிறார் இனியா.
இந்த 5 தொடர்களும் சன் டிவியின் தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல்களில் அதிகமான ரசிகர்களை தொடர்ந்து சன் டிவி கவர்ந்து டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்தே அடுத்தடுத்த இடங்களில் விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களும் உள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த புதிய தொடர்களை களமிறக்கும் வேலைகளையும் முன்னெடுத்து வருகிறது சன் டிவி. நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சன் டிவி தன்னுடைய சீரியல்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications