PS2 : இந்த ஆண்டு இதுவரை கோலிவுட்டில் அதிகமாக வசூல் செய்த படங்கள்.. லிஸ்ட் இதோ!

சென்னை : கோலிவுட்டில் வாரந்தோறும் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன.

இந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகின்றன. மாஸ் ஹீரோக்களின் படங்களும் இதில் அடங்கும்.

மாஸ் ஹீரோக்களின் படங்கள் மட்டுமில்லாமல், சிறப்பான இயக்குநர்களின் படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

கோலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்கள் : கோலிவுட்டில் இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் அதிகமாக இந்த ஆண்டு வெளியானது. விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமில்லாமல் சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படங்கள் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூல்மழை பொழிந்தது.

This years highest grossing movies in Kollywood.. PS2 leads

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர், சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான், விஜய்யின் லியோ என அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. இந்தப் படங்களும் கோலிவுட்டில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் லியோ, ஜெயிலர் படங்கள் அதிகமாக வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. முக்கியமாக லியோ படம் ரிலீசுக்கு முன்னதாகவே அதிகமான வசூலை எட்டியுள்ளன.

இதனிடையே கடந்த மாதம் 28ம் தேதி ரிலீசான பொன்னியின் செல்வன் 2 படமும் மிகச்சிறப்பான வசூலை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிகமான வசூலை எட்டியுள்ள படம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தப் படம் இதுவரை சர்வதேச அளவில் 350 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 120 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் அதிகமான வசூலை எட்டிய படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வாரிசு படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டில் இதுவரை வசூல் செய்ய படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதையடுத்து அஜித்தின் துணிவு படம் இதுவரை வசூலித்த தமிழ் படங்களில் அதிகமான வசூலை எட்டிய படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அஜித் -ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியான இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆக்ஷன் த்ரில்லராக வெளியான இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X