twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வருடம் சர்ச்சையை ஏற்படுத்திய 'நெபோடிசம்'.. ட்விட்டரில் இருந்து விலகிய நடிகைகள்!

    By
    |

    சென்னை: இந்த வருடம் சினிமாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்று, 'நெபோடிசம்'.

    பாலிவுட்டில் ஆரம்பித்து மொத்த இந்திய சினிமா துறையும் இந்த வார்த்தையை பயன்படுத்தியது.

    மர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை! மர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

    அது தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் கொடி கட்டிப் பறந்தன சோசியல் மீடியாவில்.

    நெபோடிசம் பேச்சு

    நெபோடிசம் பேச்சு

    நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு பாலிவுட்டில் பரபரப்பாகத் தலைதூக்கியது. அவரைக் கொன்றது பாலிவுட் மாஃபியா என்று ஆரம்பித்து வைத்த நடிகை கங்கனா ரனாவத்தான் நெபோடிசத்தையும் தொடங்கி வைத்தார்.

    நேரடியாக குற்றம்

    நேரடியாக குற்றம்

    இது தொடர்பாக, மகேஷ் பட், கரண் ஜோஹர் உட்பட சில பாலிவுட் பிரபலங்களை குறிவைத்து தாக்கினார். அவர்களை நேரடியாகவே குற்றம் சாட்டினார். இதையடுத்து திறமையில்லாத, பிரபலங்களின் வாரிசு நடிகர், நடிகைகளால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை தொடர்ந்தது.

    சோனாக்‌ஷி சின்ஹா

    சோனாக்‌ஷி சின்ஹா

    பிரபல வாரிசு நடிகைகளின் சோசியல் மீடியா பக்கங்களுக்கே சென்று அவர்களை நெட்டிசன்ஸ் சரமாரியாக விளாசினர். இதனால், நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, ஆலியா பட் உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

    எஃகு நரம்புகள்

    எஃகு நரம்புகள்

    இது காலங்காலமாக சினிமாவில் நடந்து வருவதுதான் என்றும் இதுபற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்றும் பல சினிமா பிரபலங்கள் கூறினர். நடிகர் சோனு சூட், உங்கள் நரம்புகள் எஃகில் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாலிவுட்டுக்கு வாருங்கள் என்று 'அவுட்சைடர்'களுக்கு அட்வைஸ் செய்திருந்தார்.

    முட்டாள்தன வாதம்

    முட்டாள்தன வாதம்

    இயக்குனர் பால்கி, இது முட்டாள்தனமான வாதம் என்றார். இவர் அமிதாப்பச்சன் நடித்த சீனி கம், தனுஷ், அமிதாப் நடித்த ஷமிதாப், பேட்மேன் உட்பட சில இந்திப் படங்களை இயக்கியவர். அவர் கூறும்போது, நெபோடிசம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. காய்கறி விற்பவர் கூட தங்களுக்கு அடுத்து தங்கள் தொழிலை தங்கள் வாரிசுகளிடம் கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

    English summary
    This year (2020) the most talked word in cinema is nepotism. This controversy continues until now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X