Big budget 2024: 2024ம் ஆண்டில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்தியா படங்கள்.. லிஸ்ட் இதோ!

சென்னை: சினிமாவில் பிரம்மாண்டங்களை நம்பி படம் எடுப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஷங்கர், ராஜமௌலி என இந்தப் பட்டியலின் நீளம் அதிகம். ராஜமௌலி துவங்கிவைத்த ட்ரெண்ட், தற்போது ஏராளமான இயக்குநர்கள் பிரம்மாண்டத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பாகுபலி படத்தை துவங்கி தற்போது அதிகமான வரலாற்று படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழிலேயே அடுத்தடுத்த வரலாற்று கதைக்களங்களில் படங்கள் அறிவிக்கப்பட்டு டைரக்ட் செய்யப்பட்டு வருகின்றன. சூர்யா -சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா படத்தின் சூட்டிங் ஆல்மோஸ்ட் நிறைவடைந்துள்ளது.

இந்தப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பொருட்செலவுடனும் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த சிவா, இந்தப் படத்தில் தன்னுடைய பிரம்மாண்ட வித்தையை களமிறக்கியுள்ளார். அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள STR48 படமும் இதேபோல வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. சிம்பு லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இம்மாத மத்தியில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ளது. படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு ரோல்களில் சிம்பு நடிக்கவுள்ளார்.

This years Big Pan India movies.. Kanguva & STR48 movies attracts most in tamil

பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் 2024: சர்வதேச அளவில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் மவுசு காணப்படுகிறது. நம்மால் இயங்க முடியாத மாய உலகை இந்தப் படங்களின் மூலம் ரசிகர்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்துக் கொள்வதே இந்தப் படங்களின் வெற்றி. அந்த வகையில் இந்திய அளவிலும் இதுபோன்ற பல பேன்டசி படங்களை பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலங்களிலேயே தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இதுபோன்ற படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் வரலாற்று பின்புலத்தில் தற்போது அதிகளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ராஜமௌலியின் பாகுபலி படங்கள்: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி 2 ஆகிய படங்கள் அந்த காலத்தில் மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்ற பிம்பத்தை ரசிகர்களுக்கு கொடுத்தன. படத்தின் நடிகர்கள், நடிகைகளின் தேர்வும் இந்தப் படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ராணா என இந்தப் படத்தின் நடிகர்கள் அந்த கேரக்டர்களாகவே மக்களால் பார்க்கப்பட்டனர். சர்வதேச அளவில் இந்தப் படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தது இந்தப் படங்களின் மேக்கிங்கிற்கு கிடைத்த வெற்றி.

அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள்: இந்தப் படங்கள் கொடுத்த வெற்றி மற்றும் வரவேற்பு காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்த வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா படம் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்தப் படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் படம் உருவாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கங்குவா, STR48 படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாக உருவாகவுள்ளது STR48 படம். இந்தப் படத்தில் சிம்பு ஹீரோ, வில்லன் என இருவேறு ரோல்களில் நடிக்கவுள்ள நிலையில், இன்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை படக்குழு சார்பில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்தப் படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்புலத்தில் உருவாகவுள்ளது. படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், இந்த மாதத்தில் மத்தியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்: இந்த படங்கள் இரண்டுமே பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் 3 படங்களும் ராம்சரண் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படமும் இந்த ஆண்டில் வெளியாகவுள்ளன. இந்த மூன்று படங்களையும் இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். இதேபோல ராஜமௌலி -மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகவுள்ள படமும் பிரம்மாண்டமாகவே திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளின் அறிவிப்புகளால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களுக்கும் எப்போதும் சினிமாவில் மவுசு இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X