ஐஸ்வர்யா ராஜேஷின் "திட்டம் இரண்டு" சூட்டிங் முடிவடைந்தது!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவந்த திட்டம் இரண்டு திரைப்படத்தின் சூட்டிங் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு திரைப்படங்களிலும் மிக பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நானி நடிப்பில் உருவாகி டக் ஜெகதீஷ் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் புதிய படக்குழுவுடன் பணியாற்றி வந்த திரில்லர் திரைப்படம் "திட்டம் இரண்டு" படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது அதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மிகப்பெரிய வரவேற்பு

மிகப்பெரிய வரவேற்பு

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷிசியும் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் ராணா மற்றும் பவன் கல்யாண் முதன்மையான கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழைப்போலவே தெலுங்கிலும் கவனம் செலுத்தி அதிக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

நேரடியாக ஓடிடி தளத்தில்

நேரடியாக ஓடிடி தளத்தில்

ரம்மி, தர்மதுரை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருந்த க/பெ ரணசிங்கம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி அப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

புது டீமுடன்

புது டீமுடன் "திட்டம் இரண்டு"

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் இவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு மொத்த படத்தையும் தனி ஒரு ஆளாக எதார்த்தமான நடிப்பின் மூலம் தூக்கி நிறுத்தி இருப்பார். இதைத்தொடர்ந்து புது டீமுடன் "திட்டம் இரண்டு" என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வர விஜய் டிவியில் பிரபலமான நடிகராகவும் தொகுப்பாளராகவும் குறும்பட இயக்குனர் ஆகவும் இருக்கும் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.

விக்னேஷ் கார்த்திக்

விக்னேஷ் கார்த்திக்

இவர் ஏற்கனவே பல குறும்படங்களை இயக்கி பிரபலமாக உள்ள நிலையில் விஜய் டிவி அசார் நடித்த ஏண்டா தலையில எண்ண வைக்கல படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் இரண்டாவது திரைப்படத்திற்கு "திட்டம் இரண்டு" என தலைப்பிட்டிருக்க தினேஷ் கண்ணன் மற்றும் வினோத்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற கொரானா சூழ்நிலை காரணமாக சூட்டிங் தள்ளி போடப்பட்ட நிலையில் லாக் டவுனுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி இப்பொழுது முடிவடைந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பல குழுவுடன் இணைந்து இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை தயாரிப்பாளர் வினோத்குமார் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைப்பாளராகவும், கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X