திட்டம் போட்டு திருடுற கூட்டம்... உலகக்கோப்பையை ஆட்டையை போடும் பார்த்திபன்

சென்னை: உலகக்கோப்பையை திருட முயற்சிக்கும் பார்த்திபனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை காமெடியுடன் சொல்லியிருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு, இயக்குநர் கம் நடிகர் பார்த்திபன் மற்றும் காமெடி கிங் கவுண்டமணி இணைந்து காமெடியில் கலக்கிய படம் டாட்டா பிர்லா படம். தொடக்கம் முதல் இறுதி வரையிலும் காமெடியில் இருவரும் புகுந்து விளையாடி இருப்பார்கள். தற்போது மீண்டும் அதே மாதிரியான ஒரு படத்தில் பார்த்திபன் புகுந்து விளையாடி இருக்கிறார்.

Thittam Poattu Thirudura Kootam Movie Trailer Released

எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தில் இடம் பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பிரபலமான பாடலில் இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, எனும் வரிகளை மையமாக வைத்து கொண்டு முழுக்கமுழுக்க ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுதர்.

ஷார்ட் ஃபிலிம் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பியவர் இப்போது பிரபு வெங்கடாச்சலம், பி.எஸ்.ரகுநாதன் தயாரிப்பில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் எனும் படத்தை இயக்கியுள்ளார். கயல் புகழ் சந்திரன், பார்த்திபன், சாத்னா டைட்டஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவில் அஸ்வத் இசையமைத்துள்ளார்.

ஒரு திருட்டு கும்பல் தலைவனாக நடித்திருக்கிறார் பார்த்திபன். திருட்டு கும்பல் எப்படி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கருவாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து மசாலா அம்சங்களும் அடங்கியிருக்கும்.

அங்கே கை வைத்து இங்கே கை வைத்து இறுதியில், உலக கோப்பையை கொள்ளையடிக்க திட்டம் போட்டு திருடப் போகிறோம் என்று முடிக்கப்பட்ட ட்ரைலர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தலைவரின் பாடலுக்கு இருக்கும் பாசிட்டிவ் வைபிரேஷன் நிச்சயம் எங்கள் படத்திற்கும் இருக்கும் என்று நம்புகிறோம் என்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பல மாதங்களுக்கு முன்னரே வெளியானது. டீசர் வெளியானவுடனேயே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் ட்ரைலர் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டீஸர்க்கு கிடைத்த வரவேற்பு நிச்சயம் ட்ரைலர்க்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர் படக்குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X