திட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்

சென்னை: திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திராத வகையில் இருக்கும் என்று அந்த படத்தின் இயக்குநர் சுதர் கூறியுள்ளார். மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சிகளோ, காதல் காட்சிகளோ தான் இருக்கும். நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படம் புதுமையானது என்றும் கூறியுள்ளார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இது அவருடைய முதல் சமூக சீர்திருத்த படமாகும். இப்படத்தில் இடம்பெற்றிருந்த புகழ்பெற்ற திருடாதே பாப்பா திருடாதே என்ற பாடல் வெகு பிரபலம்.

Thittam Poattu Thirudura Kootam Movie visual novelty on display-Director Sudhar

இப்பாடலில் வரும் திட்டம்போட்டு திருடுற கூட்டம் என்ற வைர வரிகள் அன்றைய அரசியல் சமுதாய நிகழ்வுகளை வெளிச்சம்போட்டு காட்டியதோடு, இன்றைய அரசியல் சமூக அவலத்தையும் சித்தரிப்பதாகவே உள்ளது. அந்த பாடலின் வரிகளையே சுட்டு, இந்தப்படத்தின் கதைக்கு பொருத்தமான படத்தலைப்பாக வைத்து புரட்சி செய்துள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில் உலகக்கோப்பையை திருட முயற்சிக்கும் திருட்டுக் கும்பலின் தலைவனாக இயக்குனர் கம் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். இவருடன் சாத்னா டைட்டஸ், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இது முழுக்க முழுக்க காமெடியோடு மசாலா ஐட்டங்கள் உள்ள படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறும்போது, கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்த்திராத காட்சிகளாக இருக்கும்.

Thittam Poattu Thirudura Kootam Movie visual novelty on display-Director Sudhar

பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சிகளோ, காதல் காட்சிகளோ தான் இருக்கும். நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திராத வகையில் இருக்கும்.

கலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும். எங்கள் கலை இயக்குனர் மிக சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களைக் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தை எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 27ஆம் தேதியன்று திட்டம் போட்டு திருடுற கூட்டம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X