திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை ரொம்ப நம்புறோம் - கயல் சந்திரமவுலி
சென்னை: எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடியபடி தான் தான் காட்டணும். எதை மறைக்க வேண்டுமோ, அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சந்திரமவுலி பேசினார். ரசிகர்களை மட்டுமே நம்பி இந்த படத்தை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் டு மூவி பஃப் நிறுவனம் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் திட்டம் போட்டு திருடுற கூட்டம். கிரிக்கெட் உலகக்கோப்பையை திருட திட்டம்போடும் திருட்டுக் கும்பலை மையமாக வைத்து நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், கயல் சந்திரமவுலி, சாத்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேனியல் அனி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமவுலி, கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது திட்டம் போட்டு திருடுற கூட்டம் தான். கயல் எப்படி எனக்கு ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.
எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடியபடி தான் தான் காட்டணும். எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும். பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று வெளியிடுகிறோம் என்று கூறினார்.
இத்திரைப்படத்தை எழுதி இயக்குவது சுதர். ஒளிப்பதிவுப் பணியை ஐ.மார்டின் ஜோ மேற்கொள்கிறார். இசையமைப்பது அஷ்வத். பாடல்களை எழுதியது நிரஞ்சன் பாரதி மற்றும் கே.என்.முரளிதரன் சுதர், சண்டைப்பயிற்சி பில்லா ஜெகன், நடன அமைப்பு கல்யாண் மற்றும் ஆண்டோ.


Click it and Unblock the Notifications











