Darbar: "தர்பார்"... ரஜினி - முருகதாஸ் படத்தின் பெயர்... பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!
Recommended Video

சென்னை: முருதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு தர்பார் எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தர்பார் எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது.

சர்கார் சலசலப்பு:
ஏற்கனவே சர்கார் படம் மூலம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவர் முருகதாஸ். தற்போது, ரஜினி படத்திற்கு தர்பார் எனப் பேர் வைத்துள்ளதால், படம் நிச்சயம் அரசியல் பேசும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நோ நாற்காலி:
ஆரம்பத்தில் அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு நாற்காலி எனப் பேர் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் உலா வந்தது. ஆனால், அதனை முருகதாஸ் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கதாபாத்திரம்:
பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ரஜினி போலீசாக நடிப்பது உறுதியாகியுள்ளது. எனவே, அரசியல்வாதிகளை எதிர்க்கும் போலீசாக அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், படத்தின் தலைப்பே கம்பீரமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல், தலைப்பே அதிர வைப்பதாக அவர்கள் சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனர்.

மகளாக நிவேதா:
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயனும், மகளாக நிவேதா தாமஸும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், குடும்ப செண்டிமெண்ட் கலந்த, அரசியல் பேசும் படமாக இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











