அந்தப் பக்கம் மோனிகா.. இந்தப் பக்கம் இஷா சாப்ரா... 'தோடா அட்றா சக்க!'
ஒரு புதிய தமிழ்ப் படத்தின் தலைப்புதான் இது.
ஊட்டியில் நாடக கம்பெனி நடத்துபவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.அங்கே இருப்பவர்கள் டாட்டா - பிர்லா மற்றும் ராயல் மூவரும். அவர்களுக்கு திடீர் என்று ஒரு கோடி ரூபாய் பணம் திடீரென்று கிடைகிறது.
அவர்களுக்கு அந்த பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா?

இதுதாங்க அட்றா சக்க
இந்தக் கதையைத்தான் தோடா அட்றா சக்க என்ற தலைப்பில் படமாக்குகிறார் புதிய இயக்குநர் ஸ்ரீகரபாபு.

ஒரு ஹீரோ.. ரெண்டு ஹீரோயின்
ஆர்யன் ராஜேஷ் நாயகனாகவும், மோனிகா சிங், இஷா சாப்ரா நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

காமெடிக்கு முக்கியத்துவம்
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளோம். பெரும்பகுதி படத்தை ஊட்டியில்தான் எடுத்தோம். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இரு பாடல்களை எடுத்துள்ளோம்," என்றார்.

கஞ்சாவும் உண்டு
கஞ்சாகருப்பு, சுமன் ஷெட்டி, சிவசங்கரன் மாஸ்டர் ஆகியோரும் படத்தில் உண்டு. ஜான் இசையமைத்துள்ளார். டி ரமேஷ் பாபு, டி பிரவீணா தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











