கன்னி மாடம் படம் பார்த்த திருமாவளவன் !

சென்னை : மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கன்னிமாடம் படத்தை தொல். திருமாவளவன் பார்த்து பாராட்டினார்.

Recommended Video

Kanni Maadam Success Meet - Director Metti oli Boss Venkat

நடிகர் போஸ் வெங்கட் இயக்கி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் தான் கன்னிமாடம். இந்த படம் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கண்டுகளித்தார் .

 Thoni.Thirumavalavan saw the movie Kannimaadam

திருமாவளவன் இதற்கு முன் கடந்த வாரம் வெளியான நாடோடிகள் படத்தையும் திரையரங்கிற்கு சென்று பார்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இந்த இரண்டு படங்களுமே சாதி ஒழிப்பு படங்களாகும். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் சாதி சம்பந்தபட்ட படங்களை திரையரங்கு சென்று பார்த்து வருவது ஒரு முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது. பல படங்களை பல அரசியல் தலைவர்கள் பார்த்து வந்தாலும் சாதி எதிர்ப்பு படங்களையே தொடர்ந்து பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது .

இதே போல வெளியாக இருக்கும் திரௌபதி படத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மற்றும் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்கள் பார்க்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன .

கடந்த வருடம் வெளியாகி சாதிக்கு எதிராக வலுவான குரலை எழுப்பிய பரியேறும் பெருமாள் படத்தை பல அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். இதில் முக்கியமாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்ற பலரும் பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர் .

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாதிக்கு எதிரான படங்கள் எடுக்கபட்டு வருகின்றன அந்த படங்களையும் தொடர்ந்து அரசியலில் இருப்பவர்கள் ஆதரித்து வரும் போக்கு சினிமா வட்டாரங்களில் ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X