யோகிபாபு அப்படி செய்யலாமா? ஆர்.ஜே. பாலாஜி இறங்கி செய்யுறாரு.. கொந்தளித்த இயக்குநர்!

சென்னை: யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் வெளியான ட்ரிப் படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கிய படம் தான் தூக்குதுரை. இப்படத்தில், யோகிபாபு நாயகனாக நடித்துள்ளார். மேலும், இனியா, ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம், கடந்த வாரம் வெளியான நிலையில், இப்படத்திற்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து, இன்று பிரசாத் லேபில் படக்குழுவினர் கலந்து கொண்டு கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குநர், நடிகர் யோகி பாபு படத்தின் எந்தவிதமான ப்ரோமோஷனிலும் கலந்து கொள்ளவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

thookudurai movie thanksgiving meet Director Dennis Manjunath speech

தூக்குதுரை படத்தின் கதை: காமெடி நடிகராக கலக்கி வந்த யோகிபாபு, தற்போது ஹீரோவாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜனவரி 25ந் தேதி வெளியான தூக்குதுரை படத்தில் லீட்ரோலில் நடித்துள்ளார். 1990 காலகட்டத்தில் நடப்பது போல இப்படத்தில் கதை ஆரம்பிக்கிறது. ஊர் தலைவராக இருக்கும் மாரிமுத்துவிற்கு ஊரின் மரியாதை ஆக ஒரு தங்க கிரீடம் இருந்து வருகிறது. அதே ஊருக்கு திருவிழாவிற்கு படம் ஓட்ட வரும் யோகிபாபு, மாரிமுத்துவின் மகள் இனியாவை காதலித்து ஓட முயற்சிக்கிறார்.

கிரீடம் கிடைத்ததா: இந்த விஷயம் தெரிந்த ஊர்மக்கள் யோகி பாபுவை கொலை செய்து கிணற்றில் போட்டுவிடுகின்றனர். அதில், இந்த விலையுர்ந்த கிரீடமும் கிணற்றில் மாட்டிக் கொள்கிறது. பல ஆண்டு கழித்து இந்த கிரீடம் பற்றி தெரிந்து கொண்ட பால சரவணன், மகேஷ் மற்றும் சென்ராயன் ஆகியோர் கிரீடத்தை கண்டுபிடிக்க திட்டம் போடுகிறார்கள். இதில் அவர்களுக்கு கிரீடம் கிடைத்ததா என்பது தான் தூக்குதுரை திரைப்படத்தின் கதை.

மக்களிடம் சேரவில்லை: இப்படம் வெளியான போது ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், அசோக் செல்வனின் ப்ளு ஸ்டார் படங்கள் வெளியானதால், இந்த படத்திற்கு பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதன் பிறகு படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு வந்ததால், தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று படத்தின் தேங்க்ஸ் மீட்டை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது பேசிய இயக்குநர், நல்ல படமோ, தப்பான படமோ அந்த படம் மக்களிடம் எப்படி போய் சேருகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

thookudurai movie thanksgiving meet Director Dennis Manjunath speech

யோகிபாபு அப்படி செய்யலாமா: இந்த படத்தின் ப்ரோமோஷனில் யோகிபாபு கலந்து கொள்ளவே இல்லை, என்னைப்போன்ற சிறிய இயக்குநர்கள் படத்தில் பெரிய நடிகர்கள் கலந்து கொண்டால் படம் மக்களிடம் போய் சேரும். ஆர்ஜே பாலாஜி தான் நடித்த சிங்கப்பூர் சலூன் படத்திற்காக இறங்கி ப்ரோமோஷன் செய்தார். யூடியூபிற்கு சென்றாலே, அவர் தான் பேசிக்கொண்டு இருக்கிறார். அதே அருண்விஜய்,சித்தார்த் என அனைவரும் ஊர் ஊரா சென்று படத்திற்கு ப்ரோமோஷன் செய்கின்றனர். அப்படி அவர்கள் செய்வதால் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். இது தயாரிப்பாளரை காப்பாற்றும்

அனைவருக்கும் நன்றி: ஆனால், தூக்குதுரை போன்ற ஒரு நல்ல படம் எடுத்தும்கூட அதை என்னால் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் இந்த படத்தில் நடிச்ச யோகிபாபு மற்றும் இனியா இருவருமே படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை. மக்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்ற எடுத்தப்படம் மக்களிடம் சேரவில்லை என்பதுதான் என் வருத்தம் என்றார். அப்படி இருந்த போதும், இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X