பாக்ஸ் ஆபீஸில் பேட்டக்கு 'டஃப்'பு கொடுக்கும் தூக்குதுரை #Viswasam
சென்னை: வசூலில் பேட்ட படத்திற்கு டஃப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது விஸ்வாசம்.
ரஜினிகாந்தின் படம் வெளியாகிறது என்றால் பிறர் தங்களின் படங்களை வெளியிட அஞ்சுவார்கள். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரஜினியின் பேட்ட படத்துடன் துணிந்து வெளியிட்டது சத்யஜோதி பிலிம்ஸ்.
தெரிந்து தான் ரஜினியுடன் மோதுகிறார்களா என்ற கேள்வி எழுந்தது.

நம்பிக்கை
சத்யஜோதி பிலிம்ஸின் துணிச்சலுக்கு பலன் கிடைத்துவிட்டது. அஜித், சிவா மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ரஜினி படம் வெளியாகியுள்ளபோதிலும் விஸ்வாசம் படமும் நன்றாக வசூல் செய்து கொண்டிருக்கிறது.
குடும்பங்கள்
பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உள்ளதால் பிரபலங்கள் முதல் சாதாரண ஆட்கள் வரை பலரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து பொங்கலை கொண்டாடுகிறார்கள். பேட்ட வந்து கெத்து காட்டினாலும் தூக்குதுரையின் அலப்பறையும் பிடித்திருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

குட்டீஸ்
முதியோர் முதல் குட்டீஸ் வரை அனைவரையும் பாசத்தால் கட்டிப்போட்டுவிட்டார் தூக்குதுரை. உலக அளவில் வசூலில் பேட்டையை முந்திவிட்டார் தூக்குதுரை என்று பொய் சொல்ல மாட்டோம். ஆனால் பேட்டக்கு சற்றும் சளைத்தவர் இல்லை தூக்குதுரை என்பதை வசூல் நிலவரம் தெளிவாகக் காட்டுகிறது.

தமிழக பாக்ஸ் ஆபீஸ்
தமிழக பாக்ஸ் ஆபீஸில் ரிலீஸ் நாள் அன்று பேட்ட படத்தை விஸ்வாசம் முந்திவிட்டது. 27 ஆண்டுகள் கழித்து ரஜினியின் படம் ரிலீஸ் நாளில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது சத்யஜோதி பிலிம்ஸ் ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்தது தவறு இல்லை என்பது புரிகிறது.

தூக்குதுரை
உலக அளவு வசூலில் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்துமா இல்லையா என்பதில் ரசிகர்களுக்கு கவலை இல்லை. சூப்பர் ஸ்டார் வந்தாலும் அஜித்தால் டஃப்பு கொடுக்க முடியும் என்பது தெரிந்ததே அவர்களுக்கு மகா திருப்தி. தனியாக வந்து பாக்ஸ் ஆபீஸில் கெத்து காட்டுவதை விட இப்படி பெரிய படத்துடன் வந்து மாஸ் காட்டுவது தானே கெத்து. அதை தூக்குதுரை செய்துவிட்டார்.

அஜித்
ஆமாம், அஜித்துக்கு வயதாகிவிட்டது. அவர் டை அடிக்க மாட்டார். அவரால் முடிந்த அளவு தான் டான்ஸ் ஆடுவார், சண்டை போடுவார். ஆனாலும் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்பதை சிவா வெட்ட வெளிச்சமாக திரையில் காட்டியது தான் படத்திற்கு பக்கபலம். அவர் வயதிற்கேற்ப ரொமான்ஸ் செய்ததும் கூடுதல் பலம்.


Click it and Unblock the Notifications











