twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேதாளத்தை வீழ்த்திய தூங்காவனம்! - யு.எஸ் பாக்ஸ் ஆபிஸ் ‘உண்மை’ ரிப்போர்ட்!

    By Shankar
    |

    வாஷிங்டன்(யு.எஸ்) : தீபாவளிப் படங்கள் குறித்து ட்விட்டர் பிள்ளைகள் இஷ்டம் போல் வசூல் கணக்கை ட்விட் செய்தாலும், உண்மை வெளி வராமல் போகாது அல்லவா?

    தூங்காவனம் மற்றும் வேதாளம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் தெரிய வந்துள்ளது.

    அமெரிக்க விநியோகஸ்தர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த வார இறுதி வரையில் வேதாளம் 266 ஆயிரம் டாலர்களும், தூங்காவனம் 424 ஆயிரம் டாலர்களும் வசூலித்துள்ளன.

    ரஜினிக்கு அடுத்து...

    ரஜினிக்கு அடுத்து...

    அமெரிக்காவில் ரஜினிக்கு அடுத்த நிலை ஓப்பனிங் அஜீத் படங்களுக்கு உண்டு. வேதாளமும் அதற்கு விதிவிலக்கல்ல. முதல் நாள் வேதாளம் 92 ஆயிரம் டாலர்கள் வசூலுடன் முண்ணனியில் இருந்தது, தூங்காவனத்தின் முதல் நாள் வசூல் 76 ஆயிரம் டாலர்கள் ஆகும்.

    வேதாளத்தை முந்தியது

    வேதாளத்தை முந்தியது

    அடுத்தடுத்த நாட்களில் தூங்காவனம், வேதாளத்தை முந்தி விட்டது. ஆனாலும் அஜீத்தின் முந்தய ‘வீரம்' படத்தின் 243 ஆயிரம் டாலர் வசூலை வேதாளம் முறியடித்து வார இறுதி வரையிலும் 266 ஆயிரம் டாலர்கள் வசூலித்துள்ளது. வீரமும் ஜில்லாவும் ஒரே நாளில் வெளியானது நினைவிருக்கலாம்.

    அதிக அரங்குகளில் தூங்காவனம்

    அதிக அரங்குகளில் தூங்காவனம்

    அமெரிக்காவில் இதுவரையிலும் எந்த கமல் படத்திற்கும் இல்லாத அளவில் அதிகமாக 110 திரையரங்குகளில் வெளியான தூங்காவனம், வார இறுதியில் 424 ஆயிரம் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இன்றைய ரூபாய் மதிப்பீட்டில் மூன்று கோடியை தாண்டவில்லை. ஆனாலும் பத்து கோடி பதினோரு கோடி என்று அடித்து விட்ட ட்விட்டர் பிள்ளைகளின் ஆர்வக் கோளாறை என்னவென்று சொல்வது?

    சாதனைதான்

    சாதனைதான்

    இதுவும் மொத்த வசூல் தான். தியேட்டர் வாடகை, க்யூப் கீ செலவு போக வினியோகிஸ்தர் பங்கு எவ்வளவு என்று கணக்கு பார்த்தால் தான் தெரியவரும்.
    ஆனாலும், இதுவரையிலும் வெளியான கமல் படங்களில் அதிக திரையரங்குகள் தூங்காவனம் தான் என்பது சாதனையாகும்.

    வார நாட்களில்

    வார நாட்களில்

    அதே நேரம் வார நாட்களில் வசூல் இரண்டு படங்களுக்குமே குறைவுதான். காரணம் படம் பார்க்க கூட்டம் வராதது. சில அரங்குகளில் இரண்டே பேர்தான் படம் பார்க்க வந்திருந்தனர் என்பதை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

    அட்மஸ்

    அட்மஸ்

    அதிக திரையரங்குளில் வெளியிட்டு தமிழ்ப்பட வர்ததகத்தை அமெரிக்காவில் விரிவு படுத்திய அட்மஸ் நிறுவனம் தூங்காவனம் படத்தையும் வெளியீடு செய்திருந்தது. தியேட்டர்கள் எண்ணிக்கையில் லிங்கா, ஐ வுக்கு அடுத்து தூங்காவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    கமல் படங்களில் விஸ்வரூபம்தான் அதிக வசூல்

    கமல் படங்களில் விஸ்வரூபம்தான் அதிக வசூல்

    முந்தைய கமல் படமான உத்தம வில்லன் 102 அரங்குகளில் வெளியாகி 585 ஆயிரம் டாலர்கள் வசூலித்தது. இந்தியாவில் வெளியாகாத நிலையில் அமெரிக்காவில் வெளியான விஸ்வரூபம் 70 அரங்குகளில் 1.03 மில்லியன் டாலர்கள் வசூல் தான் கமல் படங்களின் அதிக பட்சம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

    -தினகர்

    English summary
    In US Box Office, Kamal Hassan's Thoongavanam beats Ajith's Vedalam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X