»   »  தூங்கா வனம் சன் டிவி... வேதாளம் ஜெயா டிவி... இதையும் கலெக்ஷன்ல சேர்த்துட்டாங்களோ?!

தூங்கா வனம் சன் டிவி... வேதாளம் ஜெயா டிவி... இதையும் கலெக்ஷன்ல சேர்த்துட்டாங்களோ?!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூங்காவனம் மற்றும் வேதாளம் படத்தின் வசூல் குறித்து முன்னுக்குப் பின் முரணாக அவரவர் ரசிகர்கள் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

ஒருவேளை படத்தின் டிவி ரைட்சுக்காக வசூலிக்கப்பட்ட தொகையையும் சேர்த்து இவர்கள் வசூல் கணக்குக் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.


Thoongavanam and Vedalam satellite rights detail

சரி, இந்தப் படங்களின் தொலைக்காட்சி உரிமை என்னை விலைக்கு யாருக்குப் போனது என்பதைப் பார்ப்போமா?


கமல் ஹாஸனின் தூங்காவனம் படத்தைக் கேட்டு ஆரம்பத்திலிருந்தே பேரம் பேசி வந்தது விஜய் டிவி. ஆனால் கமல் தூங்காவனத்தின் தெலுங்குப் பதிப்புக்கும் சேர்த்து பெரிய விலை கூறி வந்தார். தெலுங்கு வேண்டாம் என்று விஜய் கூறி வந்தது.


விஜய் டிவிகாரர்களிடம் பேசிக் கொண்டே, இந்தப் பக்கம் சன் டிவியிலும் படத்தை விற்க முயன்று வந்த கமல், கடைசியில் தூங்காவனத்தின் தமிழ், தெலுங்கு உரிமையா ரூ 20 கோடிக்கு விற்றார். அதிர்ந்து நின்றது விஜய்.


வேதாளத்தைப் பொறுத்த வரை இந்த இரட்டை பேரங்கள் இல்லை. ஸ்ட்ரெயிட்டாகவே அவர்கள் ஜெயா டிவிக்குப் போய் விட்டார்கள். ஜெயா டிவியிடம் இவர்கள் பேரம் பேசவில்லை. கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டார்கள் (ரூ 17 கோடி எனத் தகவல்!)

English summary
Deepavali flicks Kamal Hassan's Thoongavanam was sold to Sun TV and Ajith's Vedalam acquired by Jaya TV.
Please Wait while comments are loading...