போலீஸ் ஆக ஆசைப்படும் திருடன்… மலையாள நாயகி அறிமுகமாகும் ‘தொப்பி’ பட சுவாரஸ்யங்கள்
தொப்பி படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள நாயகி ரக்ஷா இன்னுமொரு மலையாள வரவு.
மலையாளக்கரையோர குருவிகள்தான் அதிகம் தமிழ்பாடுகின்றனர். ரக்ஷாவின் வரவு தமிழ் திரையுலகிற்கு சிறந்த வரவாக இருக்கும் என்று இப்போதே ஆருடம் கூறுகிறது கோடம்பாக்கத்து பட்சி ஒன்று.
யுரேகாவின் இயக்கத்தில், ராயல் ஸ்க்ரீன்ஸ் என்ற நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தொப்பி'. இந்தப்படத்தின் நாயகி ரக்ஷா.

திருட்டு கதை
திருட்டை தொழிலாக செய்யும் ஒரு கூட்டத்தை கருவாக வைத்து, 'தொப்பி' என்ற படம் தயாராகி இருக்கிறது. 'மதுரை சம்பவம்,' 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படங்களை இயக்கிய பாடலாசிரியர் யுரேகா இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார்.

போலீசாக ஆசைபடும் திருடன்
திருட்டை தொழிலாக செய்து வரும் கும்பலை சேர்ந்த ஒரு இளைஞன் போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவனுடைய ஆசை நிறைவேறியதா, இல்லையா? என்பதே இந்த படத்தின் கதை என்கிறார் இயக்குநர்.

முரளி - ரக்ஷாராஜ்
முரளிராம் கதாநாயகனாகவும், ரக்ஷாராஜ் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஜி.எம்.கும்மார், அருள்தாஸ், திலகர், மூணாறு மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள்.

பட்டதாரி நாயகி
சமூக துறை சார்ந்த படிப்பில் பட்டம் பயின்ற ரக்க்ஷா, அந்த கல்வியின் அடிப்படையில் மலையாள கலாசார துறை மற்றும் கலை நிலையம் மூலம் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி, மாத பெயரம்பர என்ற அமைப்பின் மூலம் உலகெங்கும் சென்று தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டாராம்.

நடனக்கலையில்
இவர் சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம், குச்சிபுடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் முறையான பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளாராம்.

தொப்பி பட நாயகி
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என்ற தனது ஆசையை ‘தொப்பி' படம் நிறைவேற்றியதாக கூறுகிறார் ரக்ஷா, தொப்பி என் மனதைக் கவர்ந்த படம் என்கிறார்.

நல்ல படம்
அறிமுகமாக சிறந்த படமும் கதையும் அவசியம் என்றால், தொப்பி எனக்கு சிறந்த அறிமுகம் தரும் படமாகும். படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நல்ல பாடமாக இருந்தது. என்னுடைய சுய நம்பிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது.

குடும்பம் போல
தொப்பி பட குழுவினர் ஒரு குடும்பம் போல் என்னிடம் பாசம் பாராட்டியதை என்னால் மறக்க முடியாது. திரை உலகில் மென்மேலும் சாதிக்க நினைக்கும் எனக்கு 'தொப்பி' மூலம் கிடைக்கும் பாராட்டு சிறந்த உரமாக இருக்கும்." என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மைனா பாணியில்
கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ராம்பிரசாத் சுந்தர் இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராயல் ஸ்கிரீன்ஸ் எஸ்.பரமராஜ் தயாரித்து இருக்கிறார். படப்பிடிப்பு தேனி, குரங்கனி பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. குரங்கனியில் படமான மைனா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இதேபோல தொப்பி படமும் வெற்றி பெரும் என்கின்றனர்.

அதென்ன தொப்பி
மலைப்பகுதியில் போலீஸ் அதிகாரிகளை தொப்பிக்காரர் என்றுதான் கூறுவார்களாம். எனவேதான் தொப்பி என்று தலைப்பு வைத்திருக்கிறாராம் யுரேகா.


Click it and Unblock the Notifications











