அதிர்ச்சி.. கொரோனாவால் தொரட்டி படத்தின் நாயகன் ஷமன் மித்ரு மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்!
சென்னை: கொரோனாவுக்கு தொரட்டி படத்தின் நாயகனான இளம் நடிகர் ஷமன் மித்ரு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பி மாரிமுத்து இயக்கத்தில் வெளியான படம் தொரட்டி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஷமன் மித்ரு.
இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார். 1980களில் ஆடு கிடைபோடும் கீதாரி தொழில் செய்பவர்களின் வாழ்க்கையை உணர்த்தும் படமாக இப்படம் இருந்தது.

அட்டகாசமான நடிப்பு
இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படம் என்ற சுவடே தெரியாத அளவுக்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஷமன் மித்ரு.

ரேலா மருத்துவமனை
இந்நிலையில் நடிகர் ஷமன் மித்ரு கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஷமன் மித்ரு மரணம்
கடந்த ஒரு மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷமன் மித்ரு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இளம் நடிகரான ஷமன் மித்ருவின் மரணம் தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலங்கள் இரங்கல்
ஷமன் மித்ரு, நடிகர், தயாரிப்பாளர் மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் திகழ்ந்தார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

பலர் மரணம்
கொரோனாவால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை தமிழ் சினிமா இழந்துள்ளது. இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, மாறன், நிதிஷ் வீரா, பாடகர் கோமகன் என பலர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











