twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோயினை காணவில்லைன்னு கோர்ட்டுக்கு சென்ற ஹீரோ: போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு

    By Siva
    |

    சென்னை: தொரட்டி பட ஹீரோயின் எங்கே என்பதை கண்டுபிடித்து பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

    பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,

    Thoratti heroine missing: HC orders police to find hert

    'தொரட்டி' என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தில் கதாநாயகியாக பொள்ளாச்சியை சேர்ந்த சத்தியா என்ற சத்தியகலா (வயது 26) என்பவர் நடித்துள்ளார்.

    படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, வருகிற (ஆகஸ்டு) 2-ந் தேதி திரைப்படம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க முடிவு செய்தபோது, கதாநாயகி சத்தியகலா மட்டும் வரவில்லை.

    அவரை அவரது தந்தையும், தந்தையின் 2-வது மனைவியும் சட்டவிரோதமாக பிடித்து எங்கோ அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து கோவை மாவட்டம், மகாலிங்கபுரம் போலீசில் கடந்த 25-ந் தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள சத்தியகலாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

    ஷமன் மித்ருவின் வழக்கு நீதிபிதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகை சத்தியகலா தனது தந்தையின் கட்டுப்பாட்டில் தானே உள்ளார். அப்படி இருக்கும்போது அவரை மீட்க வேண்டும் என்று கூறி மனுதாரர் எப்படி வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

    மேலும் சத்தியகலா எங்கு உள்ளார் என்பதை கண்டறிந்து வரும் 5ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் ஹீரோயினை காணவில்லை என்ற வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Chennai high court has ordered police to find out the whereabouts of Thoratti heroine Sathyakala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X