கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டும் #தொரட்டி... #thorati
சென்னை: குடிப்பழக்கத்தால சாதாரண கூலி வேல செய்யுற ஒருத்தனோட வாழ்க்க எப்படி கெட்டு சீரழியுதுன்னு ரொம்ப யாதார்த்தமா சொல்லி, குடிக்கப் போறவங்களை தொரட்டிய கழுத்துல வச்சி இழுக்குற மாதிரி வந்திருக்குறது தான் இந்த தொரட்டி.
எப்பவுமே இந்த மாதிரி கிராமத்துல நேச்சுரலா நடக்கிற அழகான வாழ்க்கையப் பத்தி சொல்லுற படத்த பாக்கும்போது பாக்குறவங்களும் அப்பிடியே ஃபில் பண்ணி படம் முடியுற வரைக்கும் அந்த கிராமத்தோடவே ட்ராவல் பண்ணணும். அப்பதான் நம்மளும் அந்த கிராமத்தில வாழுற மாதிரி உணருவோம்.

இப்ப வந்துருக்கிற தொரட்டி படமும் இந்த ரகத்த சேந்தது தான். சிட்டியில இருக்குறவங்க எல்லாரும் இந்த மாதிரியான படத்துக்கு நிச்சயமா சப்போர்ட் பண்ணணும். அப்பதான் அடுத்தடுத்து இந்த மாதிரியான நேட்டிவிட்டி படங்கள் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும்.
தொரட்டி மாதிரியான படங்கள்லாம் மலையாளத்துல தான் ஜாஸ்தி வரும். இப்ப நம்ம ஆளுங்களும் இந்த மாதிரியான படங்கள எடுத்துட்டு வர்றது ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆடு மேய்க்கிறவங்க வாழ்க்கை கதை அப்படியே நேச்சரலா வாழ்ந்திருக்காங்க ஹீரோ சமன்மித்ருவும் ஹீரோயின் சத்யகலா.

பொதுவா கிராமத்து படம்னு எடுத்துக்கிட்டாலே நம்ம இயக்குநர் இமயம் பாரதிராஜா சார் எடுத்த பெரும்பாலான படங்கள் தான் உடனடியா நம்ம ஞாபகத்துக்கு வர்றது நியாயம். அந்த தாக்கத்துனால தான் இன்னிக்கு வர்ற பி. மாரிமுத்து மாதிரியான புதுமுக டைரக்டரும் வில்லேஜ் சப்ஜெக்ட்டுக்கு இம்பார்டண்ட் கொடுத்து எடுக்குறாங்க.
என்ன தான் நேட்டிவிட்டியோட வில்லேஜ் சம்பந்தப்பட்ட படங்கள எடுத்தாலும், அதுல ஒரிஜினாலிட்டி இருந்தாத்தான் அந்தப் படம் ரொம்பப் பெருசா சக்சஸ் ஆகும்.

தொரட்டி அப்பிடிங்குறது என்னோட தனிப்பட்ட கருத்துதான். இது ஒரு நல்ல அழகான ரொம்ப நேர்த்தியான படம். இதுல எல்லாருமே அந்த கேரக்டராகவே மாறிட்டாங்கன்னு தான் சொல்லணும். என்ன ஒண்ணு படத்துல கொஞ்சமாச்சும் காமெடி இருந்தா இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கும்னு எல்லாரும் ஃபீல் பண்றாங்க, அவ்வளவுதான்.
இந்தப் படத்த பாத்துட்டு வெளில வந்த டைரக்டர் பேரரசு என்ன சொன்னாருன்னா தயவு செஞ்சு இந்தப் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க ப்ளீஸ், அப்படிங்கறார்.


Click it and Unblock the Notifications











