»   »  தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை மரணபங்கம் செய்த டாப்ஸி

தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை மரணபங்கம் செய்த டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னை ஒதுக்கியவர்கள் தற்போது என் கால்ஷீட் கேட்டு வரிசையில் நிற்கிறார்கள் என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி பாலிவுட் சென்றார். பாலிவுட்டில் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் தனக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து டாப்ஸி கூறுகையில்,

சம்பளம்

சம்பளம்

ஹீரோவின் கடைசி படம் ஓடவில்லை, பட்ஜெட் குறைவு, தயாரிப்பாளரின் கடைசி படம் ஓடவில்லை என்று ஏதாவது காரணத்தை சொல்லி என் சம்பளத்தை குறைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள்.

போ

போ

சம்பளத்தை குறைத்துக்கொள் இல்லை என்றால் படத்தில் இருந்து வெளியேறு என்றார்கள். உனக்கென்று ஒரு பெயர் எடு, உன்னை ஒதுக்குபவர்களை உன்னை திரும்பிப் பார்க்கச் செய் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

வரிசை

வரிசை

என்னை ஒதுக்கியவர்களே தற்போது என் கால்ஷீட் கேட்டு வரிசையில் காத்திருக்கிறார்கள். சம்பளத்தை குறைக்கச் சொன்னவர்களே தற்போது இரண்டு மடங்கு சம்பளம் தர தயாராக உள்ளார்கள்.

போராட்டம்

போராட்டம்

கஷ்டமாக இருக்கிறது என்று நான் ஓடவில்லை. நின்று போராடியதால் இன்று எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. என்னை விரட்டியவர்களை கூட என் புதிய படத்தின் சிறப்பு காட்சிக்கு வருமாறு அழைத்துள்ளேன் என்றார் டாப்ஸி.

English summary
Actress Taapsee said that those who rejected her earlier are waiting for her dates now and that too for double the price.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil