நடிகர் விஜய்யின் சென்னை வீடுகளில் வருமான வரி சோதனை... அவர் இல்லைன்னாலும் தொடருது மாஸ்டர் ஷூட்டிங்
Recommended Video
சென்னை: நடிகர் விஜய், ஸ்பாட்டில் இல்லை என்றாலும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
நடிகர் விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்த, பைனான்சியர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனின் சென்னை வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

நெய்வேலி சுரங்கத்தில்
நடிகர் விஜய், தற்போது 'மாஸ்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி. 2வது சுரங்க பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அங்கு நேற்று சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரணை தொடர்பாக அவருக்கு சம்மன் வழங்கினர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சென்னைக்கு
பின்னர் நடிகர் விஜய் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு, நீலாங்கரையில் வீடு, பனையூரில் உள்ள வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது. இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது.

மாஸ்டர் ஷூட்டிங்
இந்நிலையில் விஜய் இல்லாவிட்டாலும் மாஸ்டர் பட ஷூட்டிங் நெய்வேலியில் நடந்து வருகிறது. அங்கு விஜய்யும் விஜய் சேதுபதியும் மோதும் காட்சிகள் படமாக்கப் பட்டதாகவும் விஜய் சென்னை திரும்பியதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியை மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அமைத்து வருகிறார்.

விசாரணை முடியும்
மேலும் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நடிகர் விஜய்-யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மதியத்துக்குள் விசாரணையை முடிப்பார்கள் என்றும் இன்று மாலை அல்லது இரவில் அவர் நெய்வேலி செல்வார் என்றும் அங்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











