»   »  தோழா vs இது நம்ம ஆளு: முதன் முறையாக சிம்புவுடன் மோதும் கார்த்தி

தோழா vs இது நம்ம ஆளு: முதன் முறையாக சிம்புவுடன் மோதும் கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தியின் தோழா மற்றும் சிம்புவின் இது நம்ம ஆளு 2 திரைப்படங்களும் வருகின்ற மார்ச் 25 ம்தேதியில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

இதன் மூலம் சிம்பு, கார்த்தி இருவரும் முதன்முறையாக பாக்ஸ் ஆபீஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் தற்போது உருவாகி இருக்கிறது


இது நம்ம ஆளு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் சூழ்நிலையில் கார்த்தியின் தோழா பாக்ஸ் ஆபீஸில் சாதிக்குமா?பார்க்கலாம்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

வருடக்கணக்கில் தொடர்ந்த இது நம்ம ஆளு படத்தின் பிரச்சினைகள் தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசையை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் மீதமிருக்கும் பாடல் காட்சிகளை முடித்து படத்தை வருகின்ற மார்ச் 25 ல் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.


தோழா

தோழா

காஷ்மோரா படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தோழா படத்தை ஒப்புக் கொண்ட கார்த்தி தற்போது அதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டார். கார்த்தியுடன் நாகார்ஜுனா, தமன்னா இணைந்து நடித்திருக்கும் தோழா படம் அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது.


தோழா vs இது நம்ம ஆளு

தோழா vs இது நம்ம ஆளு

2 திரைப்படங்களும் வருகின்ற மார்ச் 25 ம்தேதி வெளியாகும் என்று கூறுகின்றனர்.இதன் மூலம் முதன்முறையாக சிம்பு, கார்த்தி இருவரும் பாக்ஸ் ஆபீஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் தற்போது உருவாகி இருக்கிறது. 2 படங்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை பார்க்கலாம்.


நயன்+ பாண்டிராஜ்

நயன்+ பாண்டிராஜ்

+ சிம்புவின் புகழ் சரிந்தாலும் கூட தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் நயன்தாரா, பாண்டிராஜ் கூட்டணி இப்படத்தில் முதன்முறையாக இணைந்திருக்கின்றனர். மேலும் முன்னாள் காதலர்கள் சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்திருப்பது ஆகியவை படத்திற்கு பலமாகத் திகழ்கின்றன.


- நீண்ட நாள் தாமதம், விளம்பரங்களில் நயன்தாராவை புறக்கணிப்பது, குத்துப்பாட்டு எடுத்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்பது ஆகியவற்றை படத்தின் பலவீனங்களாக கூறலாம்.தோழா

தோழா

+முன்னாள் காதலர்கள் கார்த்தி, தமன்னா இணைந்து நடித்திருப்பது. நாகார்ஜுனா நடிப்பு ஆகியவை படத்திற்கு பலம்.


- நாகர்ஜுனா, தமன்னா இயக்குநர் வம்சி என்று தெலுங்கு சாயல் அதிகமாகவே இருக்கிறது. இதனால் படம் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்று தெரியவில்லை.


எனினும் ரசிகர்களின் விருப்பு, வெறுப்புகளை கடைசி நிமிடத்தில் கூட கணிக்க முடியாது என்பதால் மார்ச் 25 வரை காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
English summary
Karthi's Thozha& Simbu's Idhu Namma Aalu Both Movies are Planning to Release the flick on March 25, 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil