3 வாரங்களில் 85 கோடிகளைக் குவித்த 'தோழா' கார்த்தியை 100 கோடி நாயகனாக மாற்றுமா?
சென்னை: கார்த்தி-நாகார்ஜுனா நடிப்பில் வெளியான 'தோழா' திரைப்படம் 3 வது வாரத்தில் சுமார் 85 கோடிகளைத் தொட்டுள்ளது.
கடந்த 25 ம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் 'தோழா' வெளியானது. இதில் கார்த்தியுடன் 3 வது முறையாக தமன்னா இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் தமன்னா- கார்த்தி 3 வது முறையாக இணைந்த இப்படம், 3 வார முடிவில் சுமார் 85 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.
இதே வேகத்தில் சென்றால் விரைவில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என, பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிதாக எந்த போட்டிப் படங்களும் இல்லை என்பதால் இதுவரை 'தோழா' பாக்ஸ் ஆபிஸின் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி புரிந்தது.
ஆனால் நாளை வெளியாகப் போகும் 'தெறி', 'தோழா'வின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதுவரை கார்த்தியின் படங்கள் எதுவும் 100 கோடிகளைத் தொட்டதில்லை. மேலும் இந்த வருடத்தில் இதுவரை எந்தப் படமும் 100 கோடிகளை வசூலிக்கவில்லை.
தோழா 100 கோடிகளைத் தொடும் பட்சத்தில் இந்த ஆண்டின் 100 கோடி நாயகன் என்ற பெருமை, கார்த்திக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி 100 கோடி கிளப்பில் இணைவாரா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











