வடிவேலு படத்துக்கு தியேட்டர் தரக் கூடாதுன்னு மிரட்டினாங்களாமே..!
சென்னை: வடிவேலு நடித்துள்ள ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படம் ரிலீசாகக் கூடாது என சில மிரட்டுவதாக தகவல் பரவியுள்ளது.
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு இரண்டு வேடங்களில் நாயகனாக நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழாவுக்கு தயாராகி வருகின்றனர்.
ஏப்ரல் 11-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மிரட்டல்
ஆனால் இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் தரக்கூடாது என சிலர் இப்போதே மிரட்ட ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது.

ஏஜிஎஸ்
விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார் வடிவேலு என்பதற்காகத்தான் அவரை வைத்து வேறு யாரும் படம் பண்ண தயங்கி வந்தனர். இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வடிவேலுவை ஹீரோவாக வைத்து பிரமாண்ட படம் எடுக்க முன்வந்தது.

ஆட்சேபணை
அப்போதே ஆளும் தரப்பை அணுகிய ஏஜிஎஸ் நிறுவனம், இந்தப் படத்தை எடுப்பதில் அரசுத் தரப்புக்கு ஆட்சேபணைகள் உள்ளதா என்று கேட்டு, அவர்கள் இல்லை என்று சொன்ன பிறகே ஷூட்டிங்கைத் தொடங்கினர்.

டென்ஷன்
இப்போது தியேட்டர்கள் தரக்கூடாது என பிரச்சினை கிளம்பியிருப்பதால் டென்ஷனான ஏஜிஎஸ், "முதல்வர் தரப்பில் அணுகி, இந்தப் படத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறியபிறகுதான் நாங்கள் படத்தை எடுத்துள்ளோம். தேவையில்லாமல் யாரும் மிரட்ட வேண்டாம். நாங்கள் அரசுத் தரப்பை நாடி பாதுகாப்பு கோர வேண்டி வரும்," என்று கூறியுள்ளனர்.

சட்ட நடவடிக்கை
மிரட்டியவர்கள் யார் என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும், தெரிந்தால் நிச்சயம் சட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் கூறியுள்ளது தயாரிப்பாளர் தரப்பு.


Click it and Unblock the Notifications