ஐ லவ் யூ சொல்ல சொல்லி தனுஷ் பட ஹீரோயினுக்கு மிரட்டல், 30 செல் நம்பர்கள் ப்ளாக்: யாருப்பா தம்பி நீ?

திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகையான நித்யா மேனன் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், நித்யா மேனனை வளைத்து வளைத்து டார்ச்சர் செய்துள்ள இளைஞர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மல்லுவுட் கண்ணழகி

மல்லுவுட் கண்ணழகி

தமிழில் மீனா எப்படி கண்ணழகி என அழைக்கப்படுகிறாரோ; அப்படி, மலையாள சினிமாவில் நித்யா மேனனைக் கூறலாம். தனது வசீகரக் கண்களால் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும், காந்தக் கண்ணழகி. மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், தொடர்ந்து ஏராளமான படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

தமிழ் ரசிகர்களின் கண்மணி

தமிழ் ரசிகர்களின் கண்மணி

அக்கட தேசத்து கண்ணழகி நித்யா மேனன், தமிழில் 'வெப்பம்', 'காஞ்சானா 2', 'ஓகே கண்மணி', சூர்யாவுடன் '24', விஜய்யுடன் 'மெர்சல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது.

நித்யா மேனனின் திருமணம்

நித்யா மேனனின் திருமணம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் நித்யா மேனன், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தம் உள்ளன. விரைவில் நித்யா மேனனுக்கும் தொழிலதிபருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதுகுறித்த முழுத் தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்தோமா ரசிச்சோமான்னு இருக்கணும்!

பார்த்தோமா ரசிச்சோமான்னு இருக்கணும்!

ஹீரோயின்களை திரைப்படங்களில் பார்க்கும் ரசிகர்கள், அவர்களை கனவில் காதலிப்பது எல்லாம் வழக்கமான ஒன்றுதான். ஆனால், நித்யா மேனனை ஒரு இளைஞர் காதலிப்பாதாகக் கூறி பாடாய்படுத்தியுள்ளார். அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல அந்த இளைஞனின் 30 செல்போன் நம்பர்களை ப்ளாக் செய்யும் அளவிற்கு டார்ச்சர் செய்துள்ளதாகத் தெரிகிறது.

வர்க்கீஸ்க்கு எதுக்கு இந்த வம்பு

வர்க்கீஸ்க்கு எதுக்கு இந்த வம்பு

கேரளாவைச் சேர்ந்த சந்தேஷ் வர்க்கி என்ற இளைஞர்தான், நித்யா மேனனுக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பியதாகக் கூறப்படுகிறது. அவர் நித்யாமேனனை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பேட்டியளித்து புயலைக் கிளப்பியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள நித்யாமேனன் ''அந்த இளைஞர் விருப்பத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், முகநூல் பக்கத்திலும் எனக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருவதாகக்" கூறியுள்ளார்.

Recommended Video

19(1)(a) Movie Review | Yessa ? Bussa ?| 19(1)(a)| Vijay Sethupathi |*Review
அம்மா அப்பாவையும் விட்டுவைக்கலயா?

அம்மா அப்பாவையும் விட்டுவைக்கலயா?

மேலும் அந்த இளைஞர், "கடந்த 6 ஆண்டுகளாக ஏராளமான எண்களில் இருந்து பேசி தொல்லை கொடுத்துள்ளதாகவும், அப்படி 30 எண்களை 'பிளாக்' செய்துள்ளதாகவும்" நித்யா மேனன் புலம்பியுள்ளார். "ஆனாலும் வேறவேற செல் நம்பர்களில் இருந்து பேசி தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். என் அப்பா, அம்மாவையும் போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்கிறார்". எனத் தெரிவித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது விரைவில் புகார் கொடுக்கவுள்ளதாகவும் நித்யா மேனன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X