பாலியல் புகார்களை கூறி பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டியின் படத்தை வெளியிட எதிர்ப்பு.. மிரட்டல்!

சென்னை: தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிய நடிகை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கானாவை பூர்விகமாக கொண்டவர்.

இவர் பட வாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.

மேலாடையை கழட்டி

மேலாடையை கழட்டி


மேலும் தன்னை பயன்படுத்தியவர்கள் யாரும் தனக்கு பட வாய்ப்பு தராமல் போனதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீரெட்டி ஆவேசமானார். இதன் தொடர்ச்சியாக மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தி தனக்கு நீதி கேட்டார்.

பிரபலங்களின் பெயர்கள்

பிரபலங்களின் பெயர்கள்

தன்னை ஏமாற்றியவர்கள் என தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரையும் விளாசி தள்ளினார். நாணி, ஸ்ரீகாந்த், லாரன்ஸ், ஏஆர் முருகதாஸ் என பல பிரபலங்களின் பெயரை கூறி அதிர வைத்தார்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

இதனால் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் கூட தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஸ்ரீரெட்டி அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

உண்மை சம்பவங்கள்

உண்மை சம்பவங்கள்

இந்நிலையில் நடிகை ஶ்ரீரெட்டியின் வாழ்க்கை 'ரெட்டி டைரி' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளை மையப்படுத்தியும் சில உண்மை சம்பவங்களுடன் படத்தை எடுக்கின்றனர்.

முக்கிய ரோலில் ஸ்ரீரெட்டி

முக்கிய ரோலில் ஸ்ரீரெட்டி

இந்த படத்தை இயக்குநர் ராஜாங்கம் இயக்குகிறார். திரைப்பட கல்லூரி மாணவரான இவர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஶ்ரீரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திரையிட எதிர்ப்பு

திரையிட எதிர்ப்பு

படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த நிலையில் ஶ்ரீரெட்டி படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து படக்குழுவினருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளரான ரவிதேவன் தெரிவித்துள்ளார்.

போனில் மிரட்டல்

போனில் மிரட்டல்

மேலும் ரெட்டி டைரி படத்தை வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று போனில் தங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன என்றும் ரவிதேவன் தெரிவித்துள்ளார்.

உண்மைகள் அம்பலமாகும்

உண்மைகள் அம்பலமாகும்

தங்களுக்கு வரும் மிரட்டல்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் ரவிதேவன் தெரிவித்துள்ளார். இதனிடையே ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை படம் வெளிவந்தால் பல பிரபலங்கள் குறித்த உண்மைகள் அம்பலமாகும் என்பதால் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X