கேட்டாலே அந்த ஞாபகம் வருதாம்.. ஒரே டைட்டிலில் உருவாகும் 3 படங்கள்.. எல்லாம் சென்டிமென்ட்!

By

சென்னை: ஒரே டைட்டிலில் மூன்று படங்கள் உருவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமாவில் சென்டிமென்ட்களுக்கு பஞ்சமே இல்லை. எல்லாவற்றுக்கும் சென்டிமென்ட் பார்ப்பார்கள்.

பூஜை போடுவதில் இருந்து ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் உடைப்பது வரை சென்டிமென்ட்களால் நிறைந்திருக்கும் சினிமா.

இந்த சென்டிமென்ட்டால், ஒரே டைட்டிலை வைத்து மூன்று படங்கள் உருவாகி வருகின்றன.

பெல்பாட்டாம்

பெல்பாட்டாம்

கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், பெல்பாட்டாம். ரிஷப் ஷெட்டி, ஹரிப்பிரியா, யோக்ராஜ் பட், பிரமோத் ஷெட்டி, உட்பட பலர் நடித்திருந்தனர். ஜயதீர்த்தா இயக்கி இருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

மஹிமா நம்பியார்

மஹிமா நம்பியார்

இதை சத்ய சிவா இயக்குகிறார். இவர், கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த கழுகு, அசோக் செல்வன் நடித்த சவாலே சமாளி, ராஜ்கிரண் நடித்த சிவப்பு, கிருஷ்ணா நடித்த கழுகு 2 ஆகிய படங்களை இயக்கியவர். பெல்பாட்டம் படத்திலும் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார்.
ஹீரோயினாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார்

இந்தப் படம், இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் அதே பெயரில் உருவாகிறது. வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஸி உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். ரஞ்சித் எம்.திவாரி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் சிறப்பு விமானம் மூலம் படக்குழு அங்கு சென்றுள்ளது.

மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

அக்‌ஷய்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, இதன் சிறப்பு போஸ்டரை இந்த படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம், தெலுங்கில் நானி நடிப்பில் உருவாக இருக்கிறது. அங்கும் இதே டைட்டிலை வைக்க உள்ளனர். ஒரே டைட்டிலில், மூன்று மொழிகளில் ஒரே படம் ரீமேக் ஆகி வருகிறது.

ரசனையான படம்

ரசனையான படம்

இதுபற்றி தமிழ் 'பெல்பாட்டத்தை' இயக்கும் சத்ய சிவாவிடம் கேட்டபோது, 'கொரோனாவுக்கு முன்பே இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ரசனையான படமாக இது இருக்கும் என்றார். டைட்டில் பற்றி கேட்டபோது, கன்னடத்தில் வைத்த டைட்டிலே சிறப்பாக இருந்ததால், தமிழுக்கும் வைத்துள்ளோம். இந்த டைட்டிலை கேட்டாலே, பழைய ஞாபகம் வரும் என்பதால் அதை மாற்றவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X