தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்

சென்னை : பாலிவுட்டில் சமீபத்தில் குடும்ப வாரிசுகள் மட்டுமே சினிமாத் துறையில் நடித்து வருவதாக பேச்சுகள் அடிபட்டு வந்தது.

அதே போன்று தமிழிலும் மூன்று தலைமுறையாக நடித்து வரும் பல திரைப்படத்துறை வாரிசுகளும் பலர் இங்கு உண்டு.

அவ்வாறு நடித்து தங்களது திறமையின் மூலம் மிகவும் பிரபலமான மூன்று தலைமுறை வாரிசுகளை பற்றி இங்கு நாம் காண்போம்

தனித்துவமான நடிப்பு

தனித்துவமான நடிப்பு

தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன். கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடை உடை பாவனை என அனைத்திலும் வேறுபாடு காட்டும் தலைச்சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் பலருக்கும் முன் மாதிரியாக இன்றும் விளங்கி வருகிறார். இந்நிலையில் இவரின் மகனான பிரபுவும் தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவ்வாறு சிவாஜி கணேசனும் அவரது மகன் பிரபுவும் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான நிலையில் தற்பொழுது பிரபுவின் மகன் விக்ரம் பிரபு பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இதயம் முரளி

இதயம் முரளி

கன்னடத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் சித்தலிங்கையா, இவரின் மகனான முரளி தமிழில் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார். வெற்றிக்கொடிகட்டு, இதயம், ஆனந்தம் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர் முரளி. இவரின் மகன் அதர்வா முரளி தற்போது தமிழில் வளர்ந்து வரும் முன்னணி நாயகர்களில் ஒருவராக பல ஆயிரம் ரசிகர்களை கொண்டு நடிப்பில் மிரட்டி வெற்றி நடை போட்டு வருகிறார்.

ஆக்சன் சிங் அர்ஜுன்

ஆக்சன் சிங் அர்ஜுன்

பிரபல கன்னட நடிகரான சக்தி பிரசாத் கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார். கிட்டத்தட்ட கன்னடத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சக்தி பிரசாத்தின் மகன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆவார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் ஆக்சனில் கிழித்து தொங்க விட்டு வரும் அர்ஜுன் தமிழில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தனது தந்தை அர்ஜுனின் இயக்கத்தில் சொல்லிவிடவா என்ற படத்திலும் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

கடல் படத்தில் அறிமுகம்

கடல் படத்தில் அறிமுகம்

1980 மற்றும் 1990களில் காதல் மன்னனாக வலம் வந்து தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்தவர் நடிகர் கார்த்திக் முத்துராமன். இவர் காதலிக்க நேரமில்லை, சர்வர் சுந்தரம், காசேதான் கடவுளடா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். இந்நிலையில் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது பல வெற்றிப் படங்களில் நடித்து வளரும் இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். இவ்வாறு பல முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகள் மூன்று தலைமுறைகளை தாண்டி தற்போதும் திரையில் தங்களின் திறமையின் மூலம் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X