ரூ.20 லட்சம் கேட்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்தத் திட்டம்: 3 பேர் கைது
சென்னை: பிரபபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கடத்துவதாக மிரட்டிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அட்வான்ஸாக ரூ 10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து சுமா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மிரட்டிய ஆசாமிகளின் தொலைபேசி அழைப்புகளை வைத்து புலனாய்ந்த போலீசார், இதுதொடர்பாக திருமலை, அருணாச்சல பாண்டியன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரைக் கைது செய்தனர்.
விசாரணையில் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தையிடம் டிரைவராக வேலை பார்த்தவர் இந்த திருமலை என்பதும், குறுக்கு வழியில் பணக்காரர்களாக நண்பர்களுடன் சேர்ந்து இந்த மிரட்டல் நாடகம் நடத்தியதும் தெரிய வந்தது.
மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











