ரத்தம் படத்துல விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்... எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் இணைந்துள்ள படம் ரத்தம்.

நேற்றைய தினம் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்தப் படத்தில் சூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பான பெயரை பெற்று தந்துள்ளன. அவரது நடிப்பில் வித்தியாசமான தலைப்பு மற்றும் கதைகளில் படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, கொலை, பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, நான், சலீம் என அவர் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

கோடியில் ஒருவன் படம்

கோடியில் ஒருவன் படம்

இந்நிலையில் அவரது சமீபத்திய படமான கோடியில் ஒருவன் இவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இந்தப் படம் ஓடிடியிலும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

கைவசம் அரைடஜன் படங்கள்

கைவசம் அரைடஜன் படங்கள்

இவரது கைவசம் தற்போது தமிழரசன், அக்னி நட்சத்திரம், கொலை, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் என அரைடஜன் படங்களை வைத்துக் கொண்டுள்ளார். இதில் தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களை இயக்கிய சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மற்றுமொரு படத்தில் விஜய் ஆண்டனி கமிட் ஆகியுள்ளார்.

ரத்தம் படத்தின் சூட்டிங்

ரத்தம் படத்தின் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவற்றை நேற்றைய தினம் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ரத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மூன்று நாயகிகள்

மூன்று நாயகிகள்

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு 3 நாயகிகள் கமிட் ஆகியுள்ளனர். மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் படத்தில் நாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர். படத்தின் தலைப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கதையில் 3 நாயகிகள் உள்ளது மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X